கருங்குயில்நாதன் பேட்டை அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் விழா கோலாகலம்
மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழாவில், தருமபுரம் ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழாவில், தருமபுரம் ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கோயில்களில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் பிரசித்தி பெற்ற 1500 ஆண்டுகள் பழமையான தருமபுரம் ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்திற்கு சொந்தமான தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்கள் இருந்து வருகிறது. இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரம் ஆதீனத்தின் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் பதவியேற்றார். அதனை தொடர்ந்து அவர் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான கோயில்கள் அனைத்திற்கும் குடமுழுக்கு செய்ய முடிவெடுத்து ஒவ்வொரு கோயிலாக கும்பாபிஷேக திருபணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் விழாவை நடத்தி வருகிறார். அதன் ஒன்றாக மயிலாடுதுறை இன்று ஒர் கோயில் கும்பாபிஷேகம் விழா தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றது.
CBSE Board Result 2024: சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!
கருங்குயில்நாதன் பேட்டை அய்யனார் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி ஊராட்சி கருங்குயில்நாதன் பேட்டையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சக்தி புரீசுவரசுவாமி கோயிலைச் சேர்ந்த பழமைவாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பூர்ணம்பாள் புஷ்களாம்பாள் உடனாகிய அய்யனார் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகம் செய்வதற்காக கோயிலில் கட்டிடங்கள் பழுது நீக்கம், சிலைகள் சீரமைப்பு, வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது.
Singer Velmurugan Arrest: பிரபல பாடகர் வேல்முருகன் அதிரடி கைது - என்ன காரணம்?
யாகசாலை பூஜைகள்
அதனை தொடர்ந்து கடந்த மே 10 -ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கோயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு 11 -ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்றது. அதனை அடுத்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு மகாபூர்ணஹூதி நடைபெற்று, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேளதாளம் மங்கள வாத்தியங்கள் மல்லாரி இசை முழங்க புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.
UPSC Recruitment 2024: அரசு வேலை! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - நாளையே கடைசி!
அங்கு வேத விற்பனர்கள் வேதங்கள் ஓத, தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.