Bhoomeeshwarar Temple: உலக மக்களின் நன்மை வேண்டி மரக்காணம் பூமீஸ்வரர் கோயிலில் ஜப்பான் நாட்டினர் சிறப்பு யாகம்
மரக்காணத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூமீஸ்வராின் திருக்கோயில், திருமுறைகண்ட சோழ மன்னன் ராஜராஜனால் தஞ்சை பொியகோயில் நிா்மாணிக்கப்படுவதற்கு முன்னரே கட்டப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
விழுப்புரம்: உலக மக்களின் நன்மை வேண்டி ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் மரக்காணம் வரலாற்று சிறப்புமிக்க பூமீஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கிழக்குக் கடற்கரை சாலை ஓரம் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க பூமி ஈஸ்வரர் கோயில். இக்கோயிலில் ஜப்பான் நாட்டில் உள்ள தமிழர் சுப்பிரமணியன் கோபால் பிள்ளை, பால கும்ப குருமுனி தலைமையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் உலக மக்களின் நன்மைக்கும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் வேண்டி மகாசண்டி ஹோமம் நடத்தினர். 108 சங்கு பூஜை மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் மற்றும் மரக்காணம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மரக்காணத்தில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பூமீஸ்வரர் கோவில் - சில முக்கியத் தகவல்கள்..
தமிழா்களின் தொன்மையான நாகரீகம் மற்றும் பண்பாட்டுக்கு ஆதாரமான திருத்தலம் மரக்காணம். 2005-ஆம் ஆண்டில் இங்கு நிகழ்ந்த அகழ்வாய்வின் மூலம், இவ்வூரின் தொன்மைக்கு ஆதாரமான பல சான்றுகள் கிடைத்தன. சோழா்கள், விஜயநகரப் பேரரசர்கள், மராட்டிய மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயா் காலத்து நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன.
அலெக்ஸாண்டிாியா நாட்டின் வணிகா் ஒருவரால் எழுதப்பட்ட நூல் `செங்கடல் பயணக் கையேடு'. இதில், `சோபட்மா' என்று குறிப்பிடப்படும் மரக்காணம் துறைமுக நகரமாகத் திகழ்ந்த தகவல் உள்ளது. சங்க இலக்கியங்கள் மரக்காணத்தை `எயிற்பட்டினம்' என்று குறிப்பிடுகின்றன. `எயில்' என்பதும் `சோ' என்பதும் மதிலைக் குறிப்பிடும் சொல்லாகும். இந்தத் துறைமுக நகரைச் சூழ்ந்து மதில் இருந்ததால், இப்பகுதிக்கு `எயிற்பட்டினம்' என்ற பெயா் ஏற்பட்டுள்ளது.
மரக்காணத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூமீஸ்வராின் திருக்கோயில், திருமுறைகண்ட சோழ மன்னன் ராஜராஜனால் தஞ்சை பொியகோயில் நிா்மாணிக்கப்படுவதற்கு முன்னரே கட்டப்பட்டது என்பதை அறிய முடிகிறது. மரக்காணம் தலத்திலிருந்த ஈசனின் திருக்கோயில், அக்காலத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை சீற்றத்தால் மண்மூடிப் போனதாகவும், பின்னா் மீண்டும் ராஜராஜ சோழனின் காலத்தில் புதிதாக நிா்மாணிக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆசிாியா்களிடையே ஒரு கருத்து நிலவுகிறது.
மரக்காணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமீஸ்வரா், சோழர்கள் காலத்தில் ஸ்ரீபூமீஸ்வர தேவா், ஸ்ரீபூமீஸ்வரத்தாழ்வாா், திரு பூமீசுவரமுடையாா், ஸ்ரீபூமீஸ்வரமுடைய மகாதேவா், ஸ்ரீபூமீஸ்வரமுடைய நாயனாா் என்று பல திருநாமங்களுடன் வணங்கப்பட்டதைக் கல்வெட்டு தகவல்களிலிருந்து அறிய முடிகிறது.