மேலும் அறிய

Maha Shivratri 2024: திருவண்ணாமலை அண்ணாமலையாரின் சிவராத்திரி மகிமை.. செல்லுங்கள்! அருளை பெறுங்கள்..!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை பக்தர்களின் வேண்டுதலுக்கு பலன் அளிக்கும் ஒரு புண்ணிய ஸ்தலம்.

திருவண்ணாமலை அண்ணாமலையாரின் சிவராத்திரி மகிமை :

நினைத்தாலே முக்தி தரும் அற்புத ஸ்தலமான திரு அண்ணாமலை என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை வீற்றிருக்கக் கூடிய அருணாச்சலேஸ்வரர் ஆலயம் உலக பிரசித்தி பெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை பக்தர்களின் வேண்டுதலுக்கு பலன் அளிக்கும் ஒரு புண்ணிய ஸ்தலம். அண்ணாமலையாரின் அருணாச்சலேஸ்வரர் ஆலயம்  சிவராத்திரி அன்று லட்சக்கணக்கான பக்தர்களால் அலங்கரிக்கப்படும்.  இந்த சூழ்நிலையில் வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை இருக்கிறதோ அந்த தேவைகளை அருணாச்சலேஸ்வரிடம் முறையிட்டால் அது உடனடியாக முடியும் என்பது  ஐதீகம்.

சிவனடியார்கள் அதிகம் இருக்கக்கூடிய  திருவண்ணாமலையில்  சிவனே ஜோதி வடிவமாய் மலையின் வடிவமாய் திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.  சிவராத்திரி அன்று மலையை சுற்றிலும் கிரிவலப் பாதை  செல்பவர்களுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சிவபெருமான் அருள் பாலிக்கிறார்.  மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும்  எட்டு லிங்கங்களை சுற்றிவர  உங்களுடைய பூர்வ புண்ணிய கர்மாக்கள் விலகும்.  வாழ்க்கையில் நீங்கள் பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.

உதாரணத்திற்கு நீண்ட நாட்களாக உங்களுக்கு திருமணமாகவில்லை என்று வைத்துக் கொள்வோம். மகா சிவராத்திரி அன்று செருப்பு ஏதும் அணியாமல் வெறும் காலில் அண்ணாமலையாரின் கிரிவலப் பாதையை  சுற்றி இருக்கக்கூடிய சிவனை மனம் உருகி வேண்டி நடந்து சென்றால் கேட்டது கிடைக்கும் தொட்டது துலங்கும். 

கடன்களை அடைக்கும் குபேர லிங்கம் :

கிரிவலப் பாதையில் அமைந்திருக்கக் கூடிய குபேர லிங்கத்தை மகா சிவராத்திரி அன்று சென்று வழிபட்டு வர  உங்களுடைய அனைத்து கடன்களையும்  நிவர்த்தி செய்வார்.  உதாரணத்திற்கு  ஒரு செல்வந்தரின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான ஒரு சம்பவத்தை பற்றி பார்க்கலாம்.  ஒரு மிகப்பெரிய தொழில் நிறுவனத்தின் தலைவர் பல கோடி ரூபாய்க்கு கடனாளியாக சிக்கினார். அவர் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவர் இருந்ததோ ராமேஸ்வரத்தில்.  கடன்களினால் பாதிக்கப்பட்டவர் சென்னைக்கு வந்து குடியேறினார்.  தொழில் முடக்கம் என்பதால் நாளுக்கு நாள் கடன் சுமை அதிகமானது. என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்த அவர்  மகா சிவராத்திரி அன்று  திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலப் பாதையில் அமைந்திருக்கக் கூடிய குபேர லிங்கத்தை வழிபட்டு வர உங்களுடைய கடன்கள் அடையும் என்று நான் கூறினேன். அதன்படி அவரும்  திருவண்ணாமலை சுற்றி இருக்கக்கூடிய  அனைத்து லிங்கத்தையும் தரிசனம் செய்து குபேர லிங்கத்தின் தரிசனத்தை பெற்று வீடு திரும்பினார். இரண்டு நாட்களில் அவருக்கு வரக்கூடிய பல லட்சம் மதிப்பிலான பணம் கைக்கு வந்தது. இரண்டு வருடங்களாக வராத பணம் அவருக்கு குபேர லிங்கத்தின் தரிசனத்தை  கண்ட பிறகு வந்தது என்பது  அவரே நம்மிடம் வந்து நெகிழ்ச்சியுடன் கூடிய ஒரு சம்பவம்.

இதே போல் ரைஸ் மில் வைத்து நடத்தி இருந்த ஒரு தொழிலதிபர்  கொரோனா காலத்தில் முற்றிலுமாக தொழில் முடக்கத்தால்  அவர் வீட்டிலேயே  முடங்கிக் கிடந்து  2 கோடி ரூபாய்க்கு மேல் கடனாளியாக மாறினார்.  அவரும் ஜோதிடம் பார்க்க வந்தார். அவருக்கும் நாம் கூறிய பரிகாரம்  திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய குபேர லிங்கேஸ்வரரை சென்று தரிசித்து வாருங்கள், உங்களுடைய கடன்கள் அடைவது மட்டுமல்லாமல்  மிகப்பெரிய லாபத்தையும் கொடுப்பார் என்று கூறினோம்.  அதேபோல அவரும் சிவனை தரிசித்து  குபேர லிங்கத்தின்  ஆசிர்வாதத்தை பெற்று வீடு திரும்பினார். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்  அவர் வீடு திரும்பிய அடுத்த கணமே அவருடைய மனைவி கூறிய கருத்துக்கள்  நமக்கு வரவேண்டிய  இழப்பீட்டுத் தொகை கைக்கு வந்துவிட்டது  நம்முடைய வாழ்க்கை  இன்றிலிருந்து பிரகாசம் அடைந்தது என்று கூறியிருக்கிறார்.  இப்படி பல உதாரணங்களை சொல்ல முடியும்

வாழ்க்கையில் நமக்கான விதி  ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் என்பதுதான் உண்மை  அந்த உண்மையும் ஜாதகம் ரீதியாக நாம் தெரிந்து கொள்ளலாம்.  ஒருவர் ஜாதகத்தில் தசா புத்தியை வைத்து அவருடைய வாழ்க்கையில் என்ன மாதிரியான சம்பவங்கள் நடைபெறப் போகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.  அதே சமயத்தில்  விதியை மாற்றக்கூடிய  கோவில்களும்  நம் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறது.  கடன்கள் அடைவதற்கும் நீங்கள் கோடீஸ்வரர் ஆவதற்கும்  திருவண்ணாமலை அண்ணாமலையாரை சுற்றி இருக்கக்கூடிய குபேர லிங்கத்தை வழிபட்டு வர உங்களுக்கான பிரச்சனைகள் தீர்ந்து சந்தோஷம் பெருகும்.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget