மேலும் அறிய
உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் பூசாரிபட்டி குடமுழுக்கு விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு
உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் பூசாரிபட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கழுவநாதர், மாயாண்டி சுவாமி, விருமன் மற்றும் பேச்சியம்மன் திருகோவிலில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் - பூசாரிபட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கருமாத்தூர் கழுவநாதர், மாயாண்டி சுவாமி, விருமன் மற்றும் பேச்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பின் கோயில் புரணமைப்பு செய்யப்பட்டு வெகுவிமர்சையாக நடைபெற்றது., ஆதி காலத்தில் இமய மலையிலிருந்து தென் பகுதியை நோக்கி வந்த பிரம்மா, விஷ்ணு சிவன் மற்றும் பார்வதி தெய்வங்களில் பார்வதி பேச்சியம்மனாக, இந்த தளம் அமைந்துள்ள இடத்தில் வந்து குடியேறியதாகவும். இந்த பகுதியில் ஆட்சி செய்து கொண்டிருந்த பேய்க்காமன் என்ற தெய்வம் பேச்சியம்மனாக இந்த இடத்தில் அமர்ந்து மேள தாளங்கள் முழங்க பூஜைகளை செய்து கொண்டிருந்த பார்வதியை பேய்காமன், தான் வேட்டையாடிய விலங்குகளின் மாமிசங்களை உடலில் போட்டு கொண்டு வந்து இந்த இடத்தை விட்டு வெளியே கோரி மிரட்டியதாகவும், அவரிடத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள கேரளாவில் இருந்த விருமாண்டி எனும் பிரம்மா வை தங்கை பேச்சியம்மன் அழைத்து வந்த நிலையில் - விருமன் பேய்காமனுடன் போரிட்டு இந்த இடத்தை தங்கைகாக பெற்று கொடுத்தாக கூறப்படுகிறது.
மேலும் எங்கே அண்ணன் விருமன் இல்லையென்றால் மீண்டும் ஆபத்து வந்துவிடுமோ என பயந்த பேச்சியம்மன், விருமனை கோவில் வளாகத்தில் உள்ள கிணற்றில் இறங்க சொல்லி பூட்டி வைத்தாகவும், ஒவ்வொரு ஆடி மாதமும் அண்ணனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதாக உறுதியளித்து இந்த இடத்தில் அமர்ந்து இரு தெய்வங்களும் அருள்பாளித்து வருவதாக தள வரலாறு கூறுகிறது.,
இந்த கோவிலில் மூலவ தெய்வமாக பேச்சியம்மனாக பார்வதியும், கழுவநாதன் எனும் கலியுக நாதனாக சிவபெருமானும், காவல் தெய்வமாக குதிரை மீது விருமாண்டியாக பிரம்மாவும், மாயனாக விஷ்ணுவும் என மூவரும் ஒரே இடத்தில் அமைந்துள்ள தளமாக விளங்குகிறது., தங்கையான பேச்சியம்மன் எனும் பார்வதிக்கு வந்த ஆபத்தை போக்கிய விருமன் எனும் பிரம்மாவிற்கு சிலை உள்ள தளம் என்ற தனிசிறப்பு மிக்க தளமாக இத்தளம் காணப்படுகிறது., அண்ணன் விருமனுக்கு அளித்த வாக்குப்படி ஒவ்வொரு ஆண்டும் ஆடி கடைசி வெள்ளியில் கருப்பு கிடா வெட்டி சிறப்பு பூஜைகள் செய்து விருமனுக்கு படையல் வைக்கும் திருவிழா, மாசி சிவராத்திரியில் விழா என வெகுவிமர்சையாக இக் கோவில் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாப்படுவது வழக்கம்,
இந்த தளத்தில் உள்ள தெய்வங்களை வணங்கி சென்றால் நினைத்த காரியம் கைகூடும் எனவும், இங்கு உள்ள நாவல் மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் இந்த கோயிலை 12 ஆண்டுகளுக்கு பின் புரணமைப்பு செய்து குடமுழுக்கு பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றுது. சிவாச்சாரியர்கள் 6 கால பூஜைகள் செய்து கழுவநாதர் கோயிலில் உள்ள கோபுரத்திலும், மாயாண்டி சுவாமி, விருமாண்டி, பேச்சியம்மன் கோவிலில் உள்ள கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
விவசாயம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion