கரூர்: ஸ்ரீ ஆதி வேப்பம்பூ மாரியம்மன் ஆலய 10-ஆம் ஆண்டு ஆடி திருவீதி உலா.. குவிந்த பக்தர்கள்
கரூர் அண்ணா வளைவு அருள்மிகு ஸ்ரீ ஆதி வேப்பம்பூ மாரியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலய பத்தாம் ஆண்டு ஆடி திருவிழா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரூர் அண்ணா வளைவு அருள்மிகு ஸ்ரீ ஆதி வேப்பம்பூ மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலய பத்தாம் ஆண்டு ஆடி திருவிழாவில் சுவாமிகள் முக்கிய வீதியில் வழியாக திருவீதி உலா வந்தனர்.
ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் நகரப் பகுதியான அண்ணா வளைவு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆதி வேப்பம்பூ மாரியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலய பத்தாம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சியுடன் தொடர்ந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் பத்தாம் ஆண்டு ஆடித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமியின் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் அருள்மிகு ஸ்ரீ ஆதி வேப்பம் பூ மாரியம்மனுக்கும், அருள்மிகு ஸ்ரீ காளியம்மனுக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சைக்கிள் ரிஷாவில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியின் வழியாக வலம் வந்த பிறகு வான வேடிக்கையுடன் மீண்டும் சுவாமி ஆலயம் குடி புகுந்தது.
கரூர் அண்ணா வளைவு அருள்மிகு ஸ்ரீ ஆதி வேப்பம்பூ மாரியம்மன் மற்றும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலய பத்தாம் ஆண்டு ஆடி திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமியின் திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து தேங்காய், பழம் பிரசாதத்துடன் சுவாமியை மனம் உருகி வழிபட்டனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
கரூர் அண்ணா வளைவு அருள்மிகு ஸ்ரீ ஆதி வேப்பம்பூ மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலய பத்தாம் ஆண்டு ஆடி திருவிழா ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.