புரட்டாசி: அருள்மிகு ஸ்ரீ ருக்மணி சமேத பண்டரிநாதன் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்
அருள்மிகு ஸ்ரீ ரகுமாய் தாயார் சமேத ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.
கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமி பஜனை மட ஆலயத்தில் மூலவர் ருக்மணி சமேத பண்டரிநாதன் சுவாமிக்கு புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை.
புரட்டாசி மாதம் என்றாலே பல்வேறு பெருமாள் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் நகரப் பகுதியான பண்டரிநாதன் சன்னதி தெருவில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ரகுமாய் தாயார் சமேத ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமி ஆலயத்தில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு மூலவர் ரகுமாய் தாயார் மற்றும் பண்டரி நாதன் உற்சவர் சுவாமிகளுக்கு
என்னை காப்பு சாட்சி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர் எலுமிச்சை சாறு திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மூலவர் அருள்மிகு ஸ்ரீ பண்டரிநாதன் அருள்மிகு ஸ்ரீ ரகுமாரி தாயர்க்கும், உற்சவர் சுவாமிகளுக்கும் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு ஆலயத்தின் பூசாரி தூப தீபங்கள் காட்டிய பிறகு சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.
கரூர் பண்டரிநாதன் சன்னதி தெருவில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ரகுமாரி தாயார் சமேத பண்டரிநாதன் ஆலயத்தில் நடைபெற்ற புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை பண்டனிநாதன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர் ஆலயம் வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்தம், துளசி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.