(Source: ECI/ABP News/ABP Majha)
குமரியில் திருக்கொடியேற்றத்துடன் தொடங்கிய தூய மத்தேயூ தேவாலய திருவிழா
நூற்றாண்டுகளைக் கடந்த தூய மத்தேயூ தேவாலாய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புனித சவேரியார் ஆசி பெற்ற கடற்கரை கிராமங்களில் ஒன்றான பள்ளம் துறை கடற்கரை கிராமத்தில் நூற்றாண்டுகளைக் கடந்த தூய மத்தேயூ தேவாலய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புனித சவேரியாரின் ஆசி பெற்ற பல்வேறு கடற்கரை கிராமங்களில் பள்ளம் துறை கடற்கரை கிராமமும் ஒன்று , இந்த கிராமத்தில் உள்ள தூய மத்தேயூ தேவாலயம் நூற்றாண்டுகளை கடந்த தேவாலயம். இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையிலே இந்த ஆண்டுக்கான திருவிழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து திருப்பலிகளும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன. கோட்டார் மறைமாவட்ட பேராயர் நஸ்ரேன் சூசை தலைமையில் திருபலிகள் நடைபெற்றது. தேவாலயத்தின் திருக்கொடியேற்று நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தின் கடற்கரை கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கடந்த ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாட இருந்த நிலையில் கொரோனா காலகட்டம் என்பதால் விழாக்கள் நடத்த முடியவில்லை எனவே இந்த திருவிழாவோடு நூற்றாண்டு விழா கொண்டாட்டமும் இணைத்து கொண்டாடப்படுவதாக தேவாலயத்தின் அருள்பணியாளர் சூசை ஆற்றனி தெரிவித்தார். பள்ளம் துறை தேவலையாத்தில் திருவிழா துவங்கியாதல் குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்கள் விழா கோலம் பூண்டது.