மேலும் அறிய

kanda sashti 2024: காஞ்சிபுரமா திருப்பதியா?..... குமரக்கோட்டம் முருகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. சஷ்டி விரதம் கோலாகலம்

kanda sashti: சஷ்டி முதல் நாளையொட்டி ஆறுமுக பெருமானுக்கு முழுவதும் மஞ்சள் நிற மலர்களினால் அலங்காரம் சேவிக்கப்பட்டு காட்சி.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் பெருமையை விளக்கும் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலம் என கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெறுவதை முன்னிட்டு, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை மட்டுமே நடைபெறுகிறது.

kanda sashti 2024: காஞ்சிபுரமா திருப்பதியா?..... குமரக்கோட்டம் முருகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. சஷ்டி விரதம் கோலாகலம்

கந்த சஷ்டி விழா

இந்தநிலையில் குமரக்கோட்டம் முருகப்பெருமான் திருக்கோவிலில் காலை நேரத்திலேயே ஏராளமான முருக பக்தர்கள் திரண்டு வந்து பச்சை ஆடை உடுத்தி பச்சை மணி மாலை அணிந்து சஷ்டி விரதம் இருக்க தொடங்கினார்கள். கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஆறுமுக பெருமானுக்கு ஆறு கால லட்சணங்கள் ஆனது நடைபெறும். இந்த லட்சண விழாவை ஒட்டி ஒவ்வொரு நாளும் ஆறுமுகப் பெருமானாக காட்சியளிக்கும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நிறங்களினால் ஆன மலர் மாலைகள் அணிவித்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 

மஞ்சள் நிற மலர் மாலைகள்

அந்த வகையில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று ஆறுமுகப்பெருமானுக்கு முழுவதும் மஞ்சள் நிற மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு லட்சணங்கள் ஆனது நடைபெற்று வருகிறது.‌ காலை நேரத்திலேயே சஷ்டி விரதம் இருக்க வந்த பக்தர்கள் ஆறுமுகப்பெருமானுக்கு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க லட்சார்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டு சஷ்டி விரதத்தை தொடங்கி கோவில் வளாகத்தில் உள் மற்றும் வெளி பிரகாரங்களில் 108 சுற்றுகள் சுற்றிவர தொடங்கினார்கள்.

kanda sashti 2024: காஞ்சிபுரமா திருப்பதியா?..... குமரக்கோட்டம் முருகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. சஷ்டி விரதம் கோலாகலம்

சஷ்டி விரதம் தொடங்கி இருப்பதால் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் ஏராளமானோர் குமரக்கோட்டம் முருகன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருவதால் கோயில் வளாகம் முழுவதுமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகர் கோயில்

மூலவர் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி படைப்புக் கோலமூர்த்தியாகக் காட்சி தருகிறார். பிரம்மனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் கூட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி, முருகப்பெருமானை அலட்சியம் செய்த பிரம்மனிடம் தர்க்கம் (சண்டை) செய்ய அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரம்மனை சிறைப் பிடிக்கிறார் முருகன். விடுவிக்க கோரி ஈசனின் கட்டளையை எடுத்துரைத்த நந்தி தேவனையும் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் நேரில் சென்று எடுத்துரைத்து பிரம்மனை விடுவிக்க செய்கிறார். தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். அச்சிவலிங்கமே தேவசேனாதீச்வரர் என்பது மூலத்தில் அறியப்பட்டது.

kanda sashti 2024: காஞ்சிபுரமா திருப்பதியா?..... குமரக்கோட்டம் முருகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்.. சஷ்டி விரதம் கோலாகலம்

பிரளய பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்களெல்லாம் எங்கே போயின என வினவ, எனது வயிற்றுக்குள் அடக்கம் என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர். இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாசத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து ஈசனருகில் சந்நிதி கொண்டார். என்றும் அன்புடயன் ஆனதால் உருகும் உள்ளத்தான் எனும் திருநாமம் கொண்டாரென்பது இத்தல வரலாறாக உள்ளது. காஞ்சிபுரத்தில் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் இருந்தாலும் முருகருக்கு முக்கிய கோவிலாக இந்த கோவில் உள்ளது. குறிப்பாக முருகருக்கு இருக்கக்கூடிய அறுபடை கோவில்களுக்கு அடுத்த முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாக காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோவிலில் விளங்குகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
Year Ender 2024: கட்சி தொடங்கிய விஜய், து.மு. உதயநிதி, காலியாகும் நாதக.. 2024 தமிழக டாப் அரசியல் நிகழ்வுகள் இவைதான்!
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Breaking News LIVE: அமித்ஷாவிற்கு எதிராக  தமிழ்நாட்டில் வலுக்கும்  போராட்டம்
Breaking News LIVE: அமித்ஷாவிற்கு எதிராக தமிழ்நாட்டில் வலுக்கும் போராட்டம்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
Embed widget