மேலும் அறிய

காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா..‌ அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்

காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை நேரத்திலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கோயில்கள் நிறைந்த காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் கோயில்கள் நிறைந்த நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகவே, காஞ்சிபுரம் தென்னிந்தியாவின் ஆன்மீக நகரமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் நகரம் ஆயிரம் கோயில்களின் நகரம் எனப்புகழ் பெற்றது. முக்தி தரும் ஏழு நகரங்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கையின்படி ஏழு புனித நகரங்கள் முக்தி தர வல்லவைகள். 

காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா..‌ அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்

நகரேஷூ காஞ்சி

அயோத்தி, மதுரா, அரித்துவார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைன், துவாரகை ஏழு நகரங்களில் முக்தி தரும் நகரங்களாக இன்று மத நம்பிக்கைகள் தெரிகின்றன. இந்த நகரங்களில் இருக்கும் கோயில்களுக்கு சென்று வணங்கி வந்தாலும், இந்த நகரத்தில் இருக்கும் புண்ணிய தீர்த்தங்களில் குளித்தாலும், கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் முக்தி தரும் ஏழு நகரங்களில் மொத்த நகரம் காஞ்சிபுரம் என அழைக்கப்படுகிறது. நகரேஷூ காஞ்சி (நகரங்கள் சிறந்த நகரம் காஞ்சி) என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சிபுரம் உள்ளது.

மகா கும்பாபிஷேகம்

கோயில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள 108 சிவாலயங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ளது அருள்மிகு நகரீஸ்வரர் திருக்கோவில். பழமையான இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆன நிலையில், நன்கொடையாளர்கள், உபயதாரர்கள், பங்களிப்புடன்பல லட்சம் ரூபாய் செலவில் பழமை மாறாமல் நகரீஸ்வரர் திருக்கோயில் புணரமைக்கப்பட்டு மகாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா..‌ அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்

மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவில் கோபுரத்திற்கு கொண்டுவரப்பட்டது. கோயில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை ஒலிக்க, அதிர்வெட்டுக்கள் முழங்க, கலசத்திலிருந்து புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.

உற்சாகத்துடன் கலந்து கொண்ட பக்தர்கள்

பின்னர் கோயில் கருவறையில் உள்ள நகரீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு காட்சியளிக்க வைத்தனர்.அதிகாலை நேரத்திலேயே நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

நகரீஸ்வரர் திருக்கோயில் - Kanchipuram Nagareeswarar Temple

காஞ்சிபுரம் அருள்மிகு நகரீஸ்வரர் திருக்கோயில் மூலவர் சிலையாக இருக்கும் சிவபெருமானை புராண காலகட்டத்தில் தேவலோகத்தில் இருந்து வந்து இந்திரனால் நிறுவப்பட்டது என நம்பப்படுகிறது. இந்திரன் சிவபெருமானை நோக்கி இக்கோயிலில் , தான் செய்த பாவங்களிலிருந்து விடுபட சிவலிங்கத்தை பூஜை செய்து வந்ததாகவும் நம்பிக்கையாக இருந்து. மேலும் இங்கிருக்கும் சிவபெருமானை வணங்கி வந்த இந்திரனுக்கு பாவ விமோசனம் கிடைத்ததாகவும் புராண கதைகள் கூறுகின்றன. 

எனவே இங்கு இருக்கும் அருள்மிகு நகரீஸ்வரரை பூஜை செய்து வணங்கி வருபவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் நம்பிக்கையுடன் சிவபெருமானை வணங்கி செல்கின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
Embed widget