காஞ்சிபுரத்தில் பிரபல கோவிலில் பாலாலயம்.. பாலாலயம் என்றால் என்ன தெரியுமா ?
அருள்மிகு காமாட்சி அம்மாள் சமேத திருவீரட்டானேஸ்வரர் திருக்கோயில் பாலாலயம் பணி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது...
![காஞ்சிபுரத்தில் பிரபல கோவிலில் பாலாலயம்.. பாலாலயம் என்றால் என்ன தெரியுமா ? kanchipuram Kamatchi Amman Sametha Thiruveerataneswarar Thirukoil Balalayam mission started with special puja காஞ்சிபுரத்தில் பிரபல கோவிலில் பாலாலயம்.. பாலாலயம் என்றால் என்ன தெரியுமா ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/04/12eb05ab70481b37e1c105622a1406ed1699063048339113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கும்பாபிஷேகம் / குடமுழுக்கு விழா
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பெரியோரின் வாழ்க்கை. அவ்வாறு கட்டப்படும் கோவில்களுக்கு குறைந்தபட்சம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது. அவ்வாறு குடமுழுக்கு விழா செய்வது மூலம் உள்ளிருக்கும் கடவுளின் சிலைக்கு தெய்வத்தன்மை புதுப்பிக்கப்படுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. குடமுழுக்கு விழாவானது புனித கலசத்தில் பல்வேறு, ஆறுகளின் புனித நீரை நிரப்பி மந்திரங்களால் தெய்வத்தன்மை, ஏற்பட்ட நீரினால் சிலைகளுக்கும் கோபுரத்தின் உச்சியில் கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்துவார்கள்.
தெய்வ சிலைகளும் கோபுர கலசங்களும் தெய்வத்தன்மை பெறுவதால் கோவிலுக்கு செல்லாமல் கோபுர தரிசனம் மூலமாக கடவுள் அருளைப் பெற முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதன் அடிப்படையில்தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற வார்த்தை வந்ததாகவும், ஒரு கருத்து உள்ளது. மிகவும் முக்கியம் வாழ்ந்த விழாவாக குடமுழுக்கு விழா பார்க்கப்படுவதால் மிகச்சிறிய கோவில் என்றால் கூட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கு விழாவை காண வருகை புரிவார்கள்.
பாலாலயம்
கும்பாபிஷேகம் என்பது இந்த அளவிற்கு மிக வாய்ந்த ஒன்றாக உள்ளது. சிதிலமடைந்த மற்றும் பூஜை செய்வதற்கு ஏதுவற்ற கோவில்களை மீண்டும் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்து, நித்திய பூஜை செய்ய வேண்டும். அப்படி பூஜை பூஜைகள் நிற்காமல் இருக்க பாலாலயம் செய்யப்படுவது வழக்கம். கிட்டத்தட்ட இது தற்காலிக கோவிலுக்கு நிகரான ஒன்று. கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்பு பாலாலயம் செய்வது மிக இன்றி அமையாத ஒன்றாக பல ஐதீகங்கள் கூறுகின்றன. இதன் மூலம் தொடர்ந்து கடவுளின் அருள் பக்தர்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும், இதன் மூலம் கோவிலை எந்த தடையும் இல்லாமல் வேகமாக கட்டி முடிக்கப்படும் என பக்தர்கள் நம்புகின்றனர்.
திருவீரட்டானேஸ்வரர் திருக்கோயில்
![காஞ்சிபுரத்தில் பிரபல கோவிலில் பாலாலயம்.. பாலாலயம் என்றால் என்ன தெரியுமா ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/04/1190deca9fc7dea38c9524a4a7c0fdcc1699073502885113_original.jpg)
![காஞ்சிபுரத்தில் பிரபல கோவிலில் பாலாலயம்.. பாலாலயம் என்றால் என்ன தெரியுமா ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/04/1529780a358a686a2187bf511493be181699073520100113_original.jpg)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)