மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

kanchipuram Adhi kamakshi Temple : சிம்ம வாகனத்தில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சியளித்த ஆதி காமாட்சி..! காஞ்சியில் குவிந்த பக்தர்கள்..!

kanchipuram Adhi kamakshi Temple: ஆதி பீடபரமேஸ்வரி காளிகாம்பாள் கோயிலில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி எனப்படும் ஆதி பீடபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் .

காஞ்சிபுரம் ஆதி காமாட்சி

காஞ்சிபுரத்தில் பழமையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த ஶ்ரீ ஆதி காமாட்சி அம்மன் என்னும் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் கும்பாபிஷேகத்தை ஒட்டி யாகசாலை பூஜைகள் கணபதி பூஜையுடன் தொடங்கின. இதனை தொடர்ந்து இன்று ஆறாம் கால யாக பூஜைகள், தீபாராதனைகள் நிறைவு பெற்ற பிறகு புனித நீர்க் குடங்கள் சிவாச்சாரியார்களால் கோபுரங்களுக்கு மங்கல மேள வாத்தியங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மடம் சங்கராச்சாரியார் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வருகை புரிந்தார்

சிறப்பு அபிஷேகம்

இதனைத் தொடர்ந்து மூலவர் காளிகாம்பாளுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை யொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வான வேடிக்கைகளும் நடைபெற்றன .

kanchipuram Adhi kamakshi Temple : சிம்ம வாகனத்தில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சியளித்த ஆதி காமாட்சி..! காஞ்சியில் குவிந்த பக்தர்கள்..!

கும்பாபிஷேகத்தில் நினைவு நாள் இன்று இரவு ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் பூக்கடை சத்திரம், பேருந்து நிறுத்தும், கட்சபேஷ்வரர் கோவிலில் வழியாக நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது. வழியெங்கும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில்

பண்டன் என்ற அசுரனை சிறுமி வடிவம் கொண்டு, அம்பிகை அழைத்த பிறகு தேவர்களுக்கு காஞ்சிபுரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். கருணை கொண்ட கடவுள் என்பதால் காமாட்சி என பெயர் பெற்றார். இக்கோயிலில் நுழைவு வாயிலில் ஐந்து நிலை கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபமும் கொடி மரமும் அமைந்துள்ளது ‌. கருவறை அருகே உள்ள ஸ்ரீ சர்க்கரை இயந்திரத்திற்கு நாள் தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற வருகிறது. அம்மன் கோயில் என்பதால் துவார பாலகிகள் பாதுகாப்பிற்கு இருக்கும் சிற்பங்களும் காட்சியளிக்கின்றன .

kanchipuram Adhi kamakshi Temple : சிம்ம வாகனத்தில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சியளித்த ஆதி காமாட்சி..! காஞ்சியில் குவிந்த பக்தர்கள்..!

கோயில் சிறப்பு அம்சம்

இக்கோயில் விஷ்வகர்மா சமுதாய மக்கள் அதற்காக போற்றப்பட்டு வருகிறது. இக்கோயில் அருகே கம்பளத்தெரு அமைந்துள்ளது. அதேபோன்று கோவில் வளாகத்தில் ஸ்ரீ விஷ்வகர்மா, ஸ்ரீ காயத்ரி, ஆதிசங்கர ஆகியோருக்கு தனி சன்னதிகளும் அமைந்துள்ளன.

kanchipuram Adhi kamakshi Temple : சிம்ம வாகனத்தில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சியளித்த ஆதி காமாட்சி..! காஞ்சியில் குவிந்த பக்தர்கள்..!

கோயிலில் சிவலிங்கத்தில் பானம் எனப்படும் ருத்ர பாகத்தில் இறைவியின் அமர்ந்த கோலமும் காணப்படுவது சிறப்பம்சமாகும். அம்பாள் தனது கரங்களில் உடுக்கை,  சூலம் , கபாலம் ஆகியவற்றை தாங்கிக் காய்ச்சியிருக்கிறார். பிற கோவில்களில் இது போன்ற வடிவில் காணக் கிடைக்காதது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த வடிவை சக்தி லிங்கம் என அழைக்கின்றனர்.

அர்த்தநாரீஸ்வர லிங்கம்

இந்த லிங்கத்திற்கு சக்தி லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. திருமணம் தடை நீங்க விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சக்தி லிங்கத்திற்கும் ஆதி காமாட்சி விளக்கும் அபிஷேகம் செய்தால்,  விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. பிரிந்து தம்பதிகள் மீண்டும் இணையவும் திருமணமானவர்கள் ஒற்றுமையாக வாழவும் சக்தி லிங்கத்திற்கு இனிப்பு நெய்வேதியும்,  செய்து வணங்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?

TN Rain: தமிழகத்தை கட்டம் கட்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மைய அறிக்கை

பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!

நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல மாஸ்டர்! கடவுள் காப்பாத்துவாரு; அஜித்தின் எமோஷனல் பகிர்வு!

ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
TN Rain: தமிழகத்தை கட்டம் கட்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மைய அறிக்கை
TN Rain: தமிழகத்தை கட்டம் கட்டும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி - இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை வானிலை மைய அறிக்கை
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
பாஜகவை ஓடவிட்ட கல்பனா.. சோரனை மீண்டும் அரியணையில் ஏற்றிய மனைவி!
நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல மாஸ்டர்! கடவுள் காப்பாத்துவாரு; அஜித்தின் எமோஷனல் பகிர்வு!
நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல மாஸ்டர்! கடவுள் காப்பாத்துவாரு; அஜித்தின் எமோஷனல் பகிர்வு!
மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!

Rasipalan November 24: கும்பத்திற்கு சிலரின் வருகையால் மகிழ்ச்சி; மீனத்திற்கு காலதாமதம்! உங்கள் ராசிபலன்?

Redmi A4 5G: ரூ. 8,499க்கு 5ஜி, 4 GB RAM மொபைலை அறிமுகம் செய்த ரெட்மி: எப்போது விற்பனைக்கு வரும்?

தங்கை உந்தன் உள்ளம் தானே அண்ணன் என்றும் வாழும் எல்லை! - கனிமொழியை புகழ்ந்து தள்ளிய ஸ்டாலின் -  ஏன் தெரியுமா?

Embed widget