ISKCON: ஏப்ரல் 14-ஆம் தேதி இஸ்கான் சார்பில் மிகப்பெரிய ரத யாத்திரை..எங்கிருந்து எங்கு வரை தெரியுமா..?
’இஸ்கான்’ (சர்வதேச கிருஷ்ண பக்தி குழு இயக்கம்) சென்னையில் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி ரத யாத்திரை ஒன்றை நடத்த இருக்கிறது.
’இஸ்கான்’ (சர்வதேச கிருஷ்ண பக்தி குழு இயக்கம்) சென்னையில் வருகின்ற ஏப்ரல் 14-ஆம் தேதி ரத யாத்திரை ஒன்றை நடத்த இருக்கிறது.
ஏப்ரல் 14ம் தேதி பாரதி ரோட்டில் பிற்பகல் 3 மணி தொடங்கும் இந்த ரத யாத்திரையானது பெரம்பூர் ஹை ரோடு, பேப்பர் மில்ஸ் ரோடு, ரெட் ஹில்ஸ் சாலை வழியாக லட்சுமி புரத்தில் உள்ள பத்ம ஸ்ரீ சேஷ மஹாலை சென்றடைகிறது.
இதுகுறித்து இஸ்கான் வெளியிட்ட அறிக்கையில், “அகில உலக கிருஷ்ணா பக்தி இயக்கம் (இஸ்கான்), வட-சென்னை, 9வது வருடாந்திர ஸ்ரீ ஸ்ரீ கௌர நித்தாய் ரத யாத்திரை விழாவை வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2020 அன்று கொண்டாடுகிறது. இது ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் கிருஷ்ணரின் மகிமைகள் பரப்ப விரும்பிய இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியார் ஸ்ரீல பிரபுபாதாவுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ஸ்ரீஸ்ரீ கௌர நித்தாய் ரத யாத்திரைக்கு நாங்கள் முன்னோடியாக இருப்பதால், இந்த ரத யாத்திரை திருவிழா இஸ்கான் - வட சென்னைக்கு தனித்துவமானது.
பக்தர்கள் பொதுவாக ஜகன்நாதர் ரத யாத்திரை பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். இஸ்கான் வட-சென்னையில் ஸ்ரீ ஸ்ரீ கௌர நித்தாய் விக்ரகங்கள் உள்ளன. அவர்கள் வேறு யாருமல்ல, ஸாக்ஷத் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பகவான் பலராமர். இந்தக் கலியுகத்தில் அவர்கள் பக்தர்களாகத் தோன்றி சங்கீர்த்தன இயக்கத்தைப் பரப்பினார்கள். 201+ல் வடசென்னையில் ரத யாத்திரையைத் தொடங்கினோம்.
ஆளும் குழுவின் (ஜிபிசி) தலைவர் தவத்திரு பானு சுவாமி மகராஜ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து ஆசிர்வதிப்பார். இந்நிகழ்ச்சியில் இஸ்கான் நெல்லூர் கோவில் தலைவர் தவத்திரு சுகதேவ சுவாமி மகராஜ் அவர்களும் பங்கேற்று ஆசிர்வதிக்கிறார். ரத யாத்திரைக்கு திட்டமிடப்பட்ட பகுதி மற்றும் பாதை பின்வருமாறு:
பதவியேற்பு உரை பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும் மற்றும் மாலை 4 மணிக்கு ரத இழுத்தல் தொடங்குகிறது, பாரதி சாலையில் இருந்து புறப்படும் ரதம், பெரம்பூர் ஹை சாலை, பின்னர் பேப்பர் மில்ஸ் ரோடு, ரெடேரி சிக்னல், ரெட் ஹில்ஸ் சாலை வழியாக பத்மஸ்ரீ சேஷ மஹாலை (லட்சுமிபுரம்) மாலை 6.30 மணிக்கு சென்றடையும்.
பக்தர்கள் ரதம் இழுத்தும், கீர்த்தனை பாடியும், ஆடியபடி ஊர்வலம் வண்ணமயமாக இருக்கும், பத்மஸ்ரீ சேஷ மஹாலில், ஆரத்தி செய்யப்படும். கல்யாண மண்டபத்தில் தவத்திரு பானு சுவாமி மகாராஜாவின் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும், ஊர்வலப் பாதை முழுவதும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும், மேலும் மண்டபத்தில் கூடியிருந்த அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். அனைவரும் கலந்து கொண்டு மிருஷ்ணரின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர். மேலும் தகவலுக்கு, 9840087057 என்ற எண்ணிற்கு www.iskconperambur.org ஐப் பார்க்கவும்.” என தெரிவித்திருந்தது.