மேலும் அறிய

Actor Arjun: அர்ஜூனின் ஆஞ்சநேயர் கோயில்.. இப்படி ஒரு சிறப்பு இருக்கா.. மிஸ் பண்ணாதீங்க!

தீவிர அஞ்சநேயர் பக்தரான அர்ஜூன் சென்னை போரூர் அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் ஒரே கல்லினால் ஆன அமர்ந்த நிலையில் இருக்கும் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை கொண்ட கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.

தன்னுடைய ஆஞ்சநேயர் கோயிலில் இருக்கும் சிலைக்கான கல்லை தேடி ஒன்றரை ஆண்டுகள் அலைந்ததாக நடிகர் அர்ஜூன் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என அழைக்கப்படுபவர் அர்ஜூன். தீவிர அஞ்சநேயர் பக்தரான அர்ஜூன் சென்னை போரூர் அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் இருக்கும் பாரதி நகரில் ஒரே கல்லினால் ஆன அமர்ந்த நிலையில் இருக்கும் பிரமாண்டமான ஆஞ்சநேயர் சிலை கொண்ட கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இந்த ஆஞ்சநேயர் சிலை கர்நாடக மாநிலம் கொய்ரா கிராமத்தில் வடிவமைக்கப்பட்டது. சுமார் 200 டன் எடை கொண்டது. கடந்த 2021ம் ஆண்டு இந்த கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. நாள்தோறும் இந்த கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அர்ஜூன் இந்த கோயில் பற்றி கூறியுள்ளார். அதில், “சின்ன வயதில் இருந்தே அப்பா எங்களிடம் ராம் ராம் என சொல்லி வளர்த்தார். அதற்கும் சினிமாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு அடிப்படை வாஸ்து தெரியும். கோயிலில் ஆஞ்சநேயர் சிலை அமைந்திருக்கும் இடம் தேவ மூலை. இந்த கோயில் கட்டும்போது அந்த இடம் என்னிடம் இல்லை. அதற்கு உரிமையாளர் எனக்கு சொந்தக்காரர். அவரிடம் கேட்டபோது அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என சொல்லிவிட்டார்கள். நான் இப்போது சிலை இருக்கும் இடத்தைப் பார்த்து இந்த இடம் கிடைத்தால் கடவுளுக்கு ஏதாவது செய்திருக்கலாம் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். 

ஒரு 15 நாட்கள் கழித்து இந்த இடத்தை விற்கிறேன் என அதே உரிமையாளர் என்னிடம் கேட்டார். நான் அந்த இடத்தை வாங்கியதும் ஆஞ்சநேயர் சிலை வைக்கலாம்  என நினைத்தேன். ஆனால் ஒரு கல்லில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது தான் 100 ஆண்டுகளுக்கு நின்று பேசும் என முடிவு செய்தேன். இந்த சிலைக்கான கல்லை தேடி கிட்டதட்ட ஒன்றரை ஆண்டுகள் அலைந்தேன். என்னுடைய கோயிலில் பத்மாசன நிலையில் தான் ஆஞ்சநேயர் இருக்க வேண்டும் என விரும்பினேன். 

இந்த கோயிலின் ஒவ்வொரு விஷயத்தையும் கடவுள் தான் முடிவு செய்ததாக நினைக்கிறேன். பெங்களூருவில் இருந்து சென்னை கொண்டு வர 3 நாட்கள் ஆகிவிட்டது. சென்னைக்குள் கொண்டு வரும்போது சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அதையெல்லாம் சரி செய்து கொடுத்தேன்.  இந்த ஆஞ்சநேயர் சிலை செய்ய 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஸ்பதிக்கு 360 கோணத்தில் போட்டோ எல்லாம் எடுத்து எந்த விஷயத்திலும் தவறு நடந்து விடக்கூடாது என நினைத்தேன்” என அர்ஜூன் தெரிவித்துள்ளார். 

Also Read: கோயில்களில் முறைகேடு.. சாட்டையை சுழற்றும் அமைச்சர் ரமேஷ்.. அடுத்த நடவடிக்கை என்ன?

தேவ மூலை என்பது வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் ஈசானி மூலையாகும். ஆன்மீக ரீதியாக பார்த்தோம் என்றால் செல்வம் மற்றும் அறிவு ஆகியவை இணையும் இடமாக இது பார்க்கப்படுகிறது. இந்த மூலை எப்போதுமே தூய்மையாக இருக்க வேண்டும் சொல்லப்பட்டுள்ளது. இந்த மூலையில் இருக்கும் கடவுளை வணங்கும்போது வாழ்க்கையில் நம்முடைய துன்பங்கள் யாவும் விலகி இன்பங்கள், செல்வ செழிப்பு ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கையாக  பார்க்கப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
திமுக ஒப்பந்தத்தை தவெக தொடர்வது ஏன்? சென்னை பேருந்து விவகாரத்தில் அன்புமணி கேள்வி
Embed widget