மேலும் அறிய

Hanuman Jayanti 2023 : இன்று அனுமன் ஜெயந்தி..வழிபாட்டு நேரம், பூஜை, விரத முறைகள்...முழு விவரம்...!

Hanuman Jayanti 2023: அனுமன் ஜெயந்தி அன்று விரதம் மற்றும் பூஜை முறைகளை பற்றி காணலாம்.

Hanuman Jayanti 2023: அனுமன் ஜெயந்தி அன்று விரதம், பூஜை முறைகளை பற்றி காணலாம்.

அனுமன் ஜெயந்தி

அனுமன் வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் என்று அழைக்கப்படுகிறார். எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அனுமன் அமைதியாக அமர்ந்து கொண்டிருப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கேசரி மைந்தன் ஆஞ்சநேயர் மார்கழி மாதம் அமாவாசை நாளில் மூல நட்சத்திர நாளில் பிறந்த நாளை அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ஏப்ரல்-6 ஆம் தேதி (இன்று) ஆஞ்சநேய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 

பலன்கள்

அனுமன் ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும்; தீரா துன்பங்கள் விலகும்;  இன்பம் பெருகும்; ஆஞ்சநேயரை ராம நாமத்தால் வழிப்படுவதோடு, வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் கொண்டு அலங்காரம் செய்து ஆராதிக்க வேண்டும். அனுமன் ஜெயந்தி நாளன்று கோயிலுக்கு சென்று அனுமனை வழிப்பட்டால் பல நன்மைகள் நடக்கும்.

அனுமன் ஜெயந்தி அன்று  மட்டும் இல்லாமல், சனிக்கிழமை அனுமனுக்கு உகந்த நாள். சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் வந்து சேரும். போலவே, அதைவிட பல அற்புதங்களை நிகழ்த்தும் சக்தி கொண்டது. அனுமன் ஜெயந்தி நாளன்று கடைப்பிடிக்கப்படும் விரதம்.  அனுமனை முழுமையாகத் தியானித்து ஒருவேளை  உணவு மட்டும் சாப்பிட்டால், பல உன்னத பலன்கள் கிடைக்கும் என்பது பெரும்பாலானவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

வழிப்படுவது எப்படி?

அனுமன் ஜெயந்தி அன்று காலையில் விளக்கேற்றி அனுமனை வழிபடலாம். ராமர்  அல்லது அனுமன் கோயிலுக்கு சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும், பொரி, அவல், கடலை, சர்க்கரை, வடை, வெண்ணெய், தேன், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகள் நைவேத்தியமாக அனுமனுக்கு படைக்கலாம். 

வீட்டில் அனுமன் திருவுருவப் படம் இருந்தால், அதனை சுத்தம் செய்து பொட்டு வைக்க வேண்டும். அனுமன் படம் இல்லாதவர்கள் ஒரு மனை பலகையில் கோலமிட்டு வீட்டில் ராமாயண புத்தகம் இருந்தால் வைக்கலாம். இதனை அடுத்து, பூஜை அறையில் காலையில் விளக்கேற்றி அனுமன் திருவுருவப் படத்திற்கு பொட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும். அதனுடன் வடை, பழங்கள், பொங்கல் உள்ளிட்டவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். 

விரதம் இருக்கும் முறை

அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்து இராம நாமம் சொல்லி வணங்க வேண்டும். பின்பு, அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோயிலுக்கு சென்று அனுமனை வழிபட வேண்டும். அனுமனுக்கு துளசி மாலை, வடமாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம். மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கலாம். 

அன்றைய நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், மதிய வேளையில் உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவில் ராமநாமம், ஆஞ்சநேயர் சுலோகங்கள் கூறி வழிபட வேண்டும். மறுநாள் காலையில் துளசி தீர்த்தம் அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

தலைப்பு செய்திகள்

வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அம்மனை நாடி அலைகடலென திரண்ட பக்தர்கள்! ஏகௌரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
ஆடிப்பூர வளைகாப்பு உற்சவம்: விழுப்புரம் மாவட்டமே ஆன்மிகக் கடலில் மூழ்கியது!
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget