மேலும் அறிய

Ekauriyamman Temple: பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிதரும் வல்லம் ஏகௌரியம்மன் 

அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதம் ஆடிமாதம். பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம் என்றால் மிகையில்லை. தஞ்சாவூர் அருகே வல்லம் ஏகௌரியம்மன் கோயில் திருவிழா கோலம் பூண்டு விடும்.

தஞ்சாவூர்: அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதம் ஆடிமாதம். பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம் என்றால் மிகையில்லை. அந்தவகையில் ஆடி மாதத்தில் தஞ்சாவூர் அருகே வல்லத்தில் உள்ள ஏகௌரியம்மன் கோயில் திருவிழா கோலம் பூண்டு விடும்.

சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும்

ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். எனவேதான் இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம். ஆடி மாதம் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம். மழைகாலத் துவக்கமான ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள். ஆடி செவ்வாய் ஆடி பிறப்பே இறை வழிபாட்டுக்கு உரிய நாள். ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பார்கள். 

ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர். ஆடி ஞாயிறன்று அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வணங்குவார்கள். நோய்கள் நீங்கவும் ஆரோக்கியம் அதிகரிக்கவும் கூழ் வார்த்து வழிபடுகின்றனர்.

Ekauriyamman Temple: பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிதரும் வல்லம் ஏகௌரியம்மன் 

வல்லம் ஏகௌரியம்மன் கோயில் திருவிழா கோலம் பூண்டு விடும்

அத்தகைய சிறப்பு பெற்ற ஆடி மாதத்தில் தஞ்சாவூர் என்ற நகரம் தோன்றுவதற்கு முன்பு வல்லம் சோழர்களின் தலைநகராக இருந்தது. அப்போது முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட கோயிலான வல்லம் ஏகௌரியம்மன் கோயில் திருவிழா கோலம் பூண்டு விடும். சோழர்களின் வழிபடு தெய்வமாகவும், குல தெய்வமாகவும் அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய வல்லத்து காளியாகவும் விளங்கியவள்தான் இந்த  ஏகௌரியம்மன்.

சோழ மன்னர்கள் அரசு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும், வெற்றி வாகைச் சூடப் போர்க்களம் செல்லும் போதும் இந்தத் தேவியிடம் அருள் வாக்கு கேட்டு உத்தரவு பெற்ற பின்னரே செயல்படுத்துவது வழக்கம். காட்டில் அம்மன் எழுந்தருளிய இடத்தில் சுதை வடிவத்தில் அம்மன் சிலை எழுப்பப்பட்டது. 2,500 ஆண்டுகளுக்கு மேலாக அந்தச் சுதை வடிவம் இன்றளவும் மாற்றப்படாமல் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அசுர குணம் கொண்டவர்களை அழிக்க ஆக்ரோஷத்துடன் ஒரு முகம்

எட்டுத் திருக்கரங்களுடன் தேவி பத்ம பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இந்தத் தேவி ஒன்றின் மீது ஒன்றாக அமைந்த இரு திருமுகங்களுடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. அசுர குணம் கொண்டவர்களை அழிக்க ஆக்ரோஷத்துடன் ஒரு முகமும், அல்லல்பட்டு வரும் அடியவர்களின் துயர் தீர்க்க சாந்தமுடன் இன்னொரு முகமும் அமைந்துள்ளது. இப்படி இரு திருமுகங்களுடன் அமைந்த அம்மனை காண்பது அரிது.

முதலாம் ராஜராஜ சோழனின் 6வது ஆண்டு (கி.பி.991) கல்வெட்டில் அக்காலத்தில் காளாபிடாரி கைத்தலைப் பூசல் நங்கை என அழைக்கப்பட்ட ஏகெளரி அம்மனுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை பற்றிக் கூறுகிறது. கி.பி. 1535 ஆம் ஆண்டில் செவ்வப்ப நாயக்கர் தஞ்சைக்கு அரசரானார். அவரது மகன் அச்சுதப்ப நாயக்கர் இளவரசரானார். இவர்களுடைய ஆட்சியில் வல்லம் நகரம் சிறந்து விளங்கியது. இருவரும் இணைந்து வல்லம் ஏகௌரியம்மன் கோயிலைப் புதுப்பித்தனர்.

தடைப்பட்ட திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை

இக்கோயில் அம்மன் அசுரனை வதம் செய்தது ஆடி கடைசி வெள்ளிக்கிழமை. எனவே, அன்றைய நாளில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து தீ மிதித்து அம்மனைச் சாந்தப்படுத்துகின்றனர்.

தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம் போன்றவற்றுக்கு மிகச் சிறந்த பரிகாரத் தலமாக இந்தக் கோயிலைப் போற்றுகின்றனர் பக்தர்கள். திருமணத் தடை உள்ள பெண்கள், இங்கே வந்து அம்மனுக்கு புடவை சாத்தி அம்மனின் திருப்பாதத்தில் குண்டு மஞ்சளை (குளியல் மஞ்சள்) வைத்து வணங்குகின்றனர். அதில் இருந்து ஒரேயொரு மஞ்சளை எடுத்து வந்து, தினமும் குளிக்கும்போது பூசிக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, ஐதீகம்.

நேர்த்திக் கடனாக எருமைக் கன்று காணிக்கை

தீராத நோய் அல்லது திடீர் விபத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகி விட்ட கணவருக்காக வேண்டிக் கொண்டு வரும் பெண்கள் அதிகம். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பெண்கள், தங்களது கணவரை எமனிடமிருந்து காக்க வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் நேர்த்திக் கடனாக எருமைக் கன்றை காணிக்கைச் செலுத்தி வழிபடுகின்றனர்.

இங்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டு அம்மனை வழிபட, சகல சங்கடங்களும் தீர்ந்து மகிழ்ச்சி நிலைக்கும் என்கின்றனர். கருவறையில் ஏகெளரி அம்மனைச் சுற்றியபடி இரு நாகங்கள் இருப்பதைக் காணலாம். ராகுவும், கேதுவும் அம்மனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலம் இது. ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து அம்மனைத் தரிசித்தால் நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நேற்று ஆடி முதல் வெள்ளியை ஒட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கடைசி வெள்ளி அன்று கோயில் திருவிழா கோலம் பூண்டுவிடும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thanjavur Mayor Angry : ”வேலை நேரத்துல PHONE-ஆ”டென்ஷனாகி பிடுங்கிய மேயர் பதறிய பெண் அதிகாரிKenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
SPB Road: எஸ்.பி பாலசுப்பிரமணியம் சாலை பெயர் அறிவிப்பு- ரசிகனாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
விவசாயிகளே உஷார்... மழை வெளுத்து வாங்க போது... நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி தேதி!
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Crime: ஏடிஎம் கார்டை திருடி நூதன முறையில் பணம் திருட்டு: மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Mahavishnu Controversy: மகாவிஷ்ணு விவகாரம்: பணிமாறுதல் செய்யப்பட்ட 2 தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் பணி?
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
Special Bus: காலாண்டு விடுமுறை! ஊருக்குப் போக இத்தனை சிறப்பு பேருந்துகளா? முழு விவரம்
"50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான  டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட்  தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
IND vs BAN Kanpur Test:வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் - இன்னும் 1 விக்கெட் தேவை! சாதனையை எட்டுவாரா ஜடேஜா?
Embed widget