மேலும் அறிய

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம். 10 ஆயிரம் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இதன் முக்கிய திருவிழாவான மாசி பெருந்திருவிழா நேற்று (பிப்.12)  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று  பக்தர்கள் உலுப்பகுடி அருகிலுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து அங்கிருந்து புனித தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்து அரண்மனை சந்தன கருப்பு கோயிலில் சேர்ந்தனர்.

Farmers' Protest 2.0: டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள் - குவிக்கப்பட்டுள்ள போலீசார்: 144 தடை, எல்லைகள் மூடல்

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க வர்ணக் குடைகளுடன் பரிவாரங்களுடன் ஊர்வலமாக அங்கு கூடியிருந்த பக்தர்களை கோயிலுக்கு அழைத்து வந்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி மஞ்சள் ஆடைகள் அணிந்த நிலையில் கோவிந்தா கோஷம் முழங்க மாரியம்மன் கோயிலை சென்றடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மஞ்சள் காப்பு கட்டினர். இதில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர்.

Breaking News LIVE: ஆளுநர் மீது உரிமை மீறல் பிரச்சினை - சபாநாயகரிடம் காங்கிரஸ் கோரிக்கை

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

இரவு சுமார் 9 மணிக்கு அம்மன் குளத்திலிருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்படும். இதை தொடர்ந்து வரும் 16,20,23 ஆம் தேதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்ம, அன்ன வாகனத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் ஊர்வலமாக நத்தத்தின் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து செல்லும். இந்த விழா நாட்களில் பக்தர்கள் கோயிலுக்கு வந்து மாவிளக்கு, கரும்புதொட்டில், அங்கபிரதட்சணம், அலகுகுத்துதல், அரண்மனைப் பொங்கல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள்.

Kiss Day 2024: இதழும் இதழும் இணையட்டுமே.. முத்தத்தை கொண்டாடிய தமிழ் சினிமா பாடல்கள்!

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

வரும் பிப்ரவரி 27ஆம் தேதி செவ்வாய்கிழமை விழாவின் முக்கிய நிகழ்வாக அக்னிசட்டி எடுத்தல், கழுகுமரம் ஊன்றி பின்னர் ஏறுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்குவதும் நடைபெறும். மறுநாள் (பிப்28) காலையில் அம்மன் மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து அம்மன் கோயிலை சென்றடையும்.

Rahul Gandhi: புது டிவிஸ்ட்.. மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல் காந்தி..!
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

இத்துடன் திருவிழா நிறைவு பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோவில் பூசாரிகள் உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பொதுசுகாதாரப் பணி, குடிநீர் வசதிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகமும், பாதுகாப்பு ஏற்பாடுகளை நத்தம் காவல்துறையினரும் செய்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
Ayodhya Ram Temple:  தங்க இழைகளால் நெய்யப்பட்ட உடையில் ராமர் - அயோத்தியில் அட்சய திருதியை கொண்டாட்டம்!
தங்க இழைகளால் நெய்யப்பட்ட உடையில் ராமர் - அயோத்தியில் அட்சய திருதியை கொண்டாட்டம்!
Breaking News LIVE: மோடி தீபாவளி விடுமுறை எடுப்பதில்லை.. ராகுல் சுற்றுலாவுக்கு தாய்லாந்து செல்கிறார் - அமித்ஷா
Breaking News LIVE: மோடி தீபாவளி விடுமுறை எடுப்பதில்லை.. ராகுல் சுற்றுலாவுக்கு தாய்லாந்து செல்கிறார் - அமித்ஷா
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட சென்ற அய்யாக்கண்ணு - அடுத்து நடந்தது என்ன?
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட சென்ற அய்யாக்கண்ணு - அடுத்து நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Shakeela Vs Bayilwan Ranganathan | ”அவ நாக்கு அழுகிடும்” சகீலா-பயில்வான் மோதல் சர்ச்சையில் விவாதம்Police Inspection at Savukku house | சவுக்கு வீட்டில் கஞ்சா சிகரெட்கள்.. தனிப்படை சோதனையில் பறிமுதல்Mallikarjun Kharge on Modi | ”அம்பானி அதானியுடன் டீல்? மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா?” கார்கே பதிலடிArvind Kejriwal Gets Interim Bail |வெளியே வந்த கெஜ்ரிவால்!ஆம் ஆத்மி ஆட்டம் ஆரம்பம்..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
Ayodhya Ram Temple:  தங்க இழைகளால் நெய்யப்பட்ட உடையில் ராமர் - அயோத்தியில் அட்சய திருதியை கொண்டாட்டம்!
தங்க இழைகளால் நெய்யப்பட்ட உடையில் ராமர் - அயோத்தியில் அட்சய திருதியை கொண்டாட்டம்!
Breaking News LIVE: மோடி தீபாவளி விடுமுறை எடுப்பதில்லை.. ராகுல் சுற்றுலாவுக்கு தாய்லாந்து செல்கிறார் - அமித்ஷா
Breaking News LIVE: மோடி தீபாவளி விடுமுறை எடுப்பதில்லை.. ராகுல் சுற்றுலாவுக்கு தாய்லாந்து செல்கிறார் - அமித்ஷா
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட சென்ற அய்யாக்கண்ணு - அடுத்து நடந்தது என்ன?
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட சென்ற அய்யாக்கண்ணு - அடுத்து நடந்தது என்ன?
10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
The Boy and the Heron Review : தன் கற்பனை கடலில் மூழ்கடிக்கும் மியாசாகி.. The Boy and the Heron பட விமர்சனம்
The Boy and the Heron Review : தன் கற்பனை கடலில் மூழ்கடிக்கும் மியாசாகி.. The Boy and the Heron பட விமர்சனம்
Kingdom of the Planet of the Apes Review: சீசர் பெயரை காப்பாற்றியதா? கிங்டம் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்.. விமர்சனம் இதோ..!
Kingdom of the Planet of the Apes Review : சீசர் பெயரை காப்பாற்றியதா? கிங்டம் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் விமர்சனம் இதோ..!
Akshaya Tritiya 2024: அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
Embed widget