மேலும் அறிய
Advertisement
அரூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கும்பாபிஷேக விழா - குவிந்த பக்தர்கள்
அரூர் அருகே 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் கும்பாபிஷேகம் தமிழ் ஆகம விதிப்படி வெகு விமரிசையாக நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த புத்தூர் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்து அறநிலை துறைக்கு சொந்தமான, இந்த சிவன் கோயிலை கிராம மக்கள் ஒன்றிணைந்து புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த கோயில் திருப்பணிகள் முடிவுற்று, இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த சிவன் கோவில் கும்பாபிஷேகம் தமிழ் ஆகம விதிப்படி நடைபெற்றது.
நேற்று மாலை முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு கார்த்திகை, ரோகிணி, சந்திரன் உள்ளிட்டோருக்கு சிறப்பு பூஜை செய்து, முளைப்பாரிகள் எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாமிகளுக்கு காப்பு அணிவிக்கப்பட்டு திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து கோவில் கோபுரத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்து தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
மேலும் இந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி, திருப்புகழ் உள்ளிட்ட அனைத்து மந்திரங்களும் தமிழில் ஓதப்பட்டு, தமிழ் ஆகம விதிப்படி நடைபெற்றது. இதனை அடுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அரூர் அருகே சாலையில் அடிபட்டு கிடந்த சிட்டுக்குருவியை மீட்டு பனித்துளிகள் மூலம் உயிர்ப்பு கொடுத்த இளம்பெண்ணின் மனிதம்.
தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் ஹேமா ஸ்ரீ தம்பதியினர் தங்களது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்பொழுது பெத்தூர் அருகே சாலையில் சிட்டுக்குருவி ஒன்று அடிபட்டு துடிதுடித்து கிடந்துள்ளது. இதனை கண்ட ஹேமா ஸ்ரீ திரும்பி வந்து சிட்டுக்குருவியை கையில் எடுத்து பார்த்துள்ளார். அப்பொழுது சிட்டுக்குருவி அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் துடிதுடித்து வந்துள்ளது. ஆனால் அதற்கு தண்ணீர் கொடுப்பதற்கு தங்களிடத்தில் தண்ணீர் பாட்டில் இல்லாததால் செய்வதறியாது திகைத்து நின்று உள்ளார்.
இந்நிலையில் காலை நேர பனிமூட்டத்தில் அருகில் உள்ள புற்களின் மீது பனித்துளிகள் தேங்கி கிடந்துள்ளது. இதனை அடுத்து சிட்டுக்குருவியை கையில் ஏந்திய ஹேமாஸ்ரீ புற்களின் மேலிருந்த பனித்துளிகளை எடுத்து சிட்டுக்குருவிக்கு தண்ணீர் ஊற்றியுள்ளார். அப்பொழுது மயக்க நிலையில் சிட்டுக்குருவி, சிறிது நேரத்திற்கு பிறகு சுயநினைவுக்கு வந்து, மெல்ல கண் விழித்து நடக்க தொடங்கியுள்ளது.
மீண்டும் ஹேமா ஸ்ரீ பனித்துளிகளை கொண்டு சிட்டுக்குருவிக்கு தண்ணீர் ஊட்டினார். சிறிது நேரம் கழித்து சிட்டுக்குருவி உயிர்ப்புடன் பறந்து சென்றது. இதனை கண்ட ஹேமா ஸ்ரீ அவரது கணவர் பன்னீர்செல்வம் இருவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சாலையில் அடிபட்டு கிடந்த சிட்டுக்குருவியை எடுத்து பனித்துளிகளின் மூலம் உயிர்ப்பு கொடுத்த ஹேமா ஸ்ரீ மனிதநேயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion