மேலும் அறிய

கரூர்: ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய பிச்சாண்டவர் திருவீதி உலா

அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பிச்சாண்டவர் திருவீதி உலா.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சியாக பிச்சாண்டவர் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் பிச்சாண்டவர் திருவீதி உலாவை முன்னிட்டு பிச்சாண்டவர்க்கு ஆலய மண்டபத்தில் என்னைக் காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, அபிஷேக பொடி, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பிச்சாண்டவருக்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி பண்ண மாலைகள் அணிவித்த பிறகு மேல தாளங்கள் முழங்க பிச்சாண்டவர் திருவீதி உலா ஆலயத்தில் இருந்து புறப்பட்டது.

கரூர்: ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய பிச்சாண்டவர் திருவீதி உலா

ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக கூடியிருந்த பக்தர்களுக்கு காட்சியளித்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. மார்கழி மாத பிச்சாண்டவர் திருவீதி உலாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழியெங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடராஜர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சவுந்தர்நாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் மற்றும் சுவாமி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று புகழ்ச்சோழர் மண்டபத்தில் உற்சவர் நடராஜர், விநாயகர், பாலமுருகன், அம்பிகை உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகளை கொலுவிருக்க செய்தனர். 

கரூர்: ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய பிச்சாண்டவர் திருவீதி உலா

அதைத் தொடர்ந்து பக்தர்கள் முன்னிலையில் சுவாமிகளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு அன்னத்தால் அபிஷேகமும், பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அளித்த பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தின் நடைபெற்ற நடராஜர் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண கருர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.

காளியம்மன் கோயிலில் 108 விளக்கு பூஜை

தோகைமலை அருகே பாதிரிப்பட்டி ஊராட்சி நாக நோட்ட காரம்பட்டி பருவமழை வேண்டுதல், மாங்கல்யம் நீடித்து இருத்தல், வேண்டி காளியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. தோகைமலை அருகே திருவாதிரை தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் சார்பாக மகா காளியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இத்திருவிளக்கு பூஜை ஆனது விழா குழுவினர்களின் ஏற்பாட்டின் படி அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து திருவிளக்கு பூஜை நடத்துவதற்கு விழா குழுவினர் முடிவு செய்து அறிவித்தனர். அன்று முதல் இப்பகுதி பொதுமக்கள் எட்டு நாட்கள் விரதம் இருந்து வந்தனர். இதனை அடுத்து நேற்று திருவிளக்கு பூஜை தொடங்கியது.

இதில் பூஜைக்கு வந்த பெண்கள் ஐந்து முக பித்தளை குத்துவிளக்குகளை கொண்டு வந்திருந்தனர் பூஜை பொருட்கள் அனைத்தும் விழா குழுவினர்களால் வழங்கப்பட்டு பூஜையை நடத்தினார். இத்திருவிளக்கு பூஜையின் சிறப்பு அம்சமாக 108 பெண் பக்தர்கள் விளக்கேற்றி மழை வேண்டுதல், வறுமையை ஒழித்தல், குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துதல், தொழில் கல்வியில், சிறந்து விளங்குதல், சமூக ஒற்றுமை மாங்கல்யம் நீடித்திருத்தல், என வரம் கேட்டு குங்குமம் துளசி மலர் மஞ்சள் தானியம் போன்ற பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்து மகா காளியம்மனுக்கு அபிஷேகம் செய்து, ஐம்பொருள் அன்னதான பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பூஜையில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget