கரூர்: அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை.
மூலவருக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்து, பல்வேறு வண்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது.
![கரூர்: அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை. avani month pooja at anna salai arulmiku sri karpaka vinayagar temple கரூர்: அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/14/1b4687f5c4bf004c3f061bde8f3cf9641663169979725183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் நகரப் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை மூலவர் கணபதிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை.
கரூர் நகர பகுதியான அண்ணா சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு என்னைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து, மூலவருக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்து, பல்வேறு வண்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்திய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.
கரூர் உழவர் சந்தை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் பஞ்சமி திதி முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்.
கரூர் உழவர் சந்தை, பிரம்ம தீர்த்தம் சாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்ரீ வாராகி அம்மனுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து, வராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தில் சிவாச்சாரியார் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி, அதை தொடர்ந்து நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பல்வேறு சோடச்சர உபச்சாரங்கள் நடைபெற்ற பிறகு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாரதனை நடைபெற்றது.
ஆலயத்தில் நடைபெற்ற பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து வந்தனர்.
கரூர் மாவட்டத்தில் ஆவணி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு விநாயகர் ஆலயங்களில் காலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் கணபதி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதை தொடர்ந்து இன்று பஞ்சமி திதியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று அதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வாராஹி அம்மனுக்கு மகா தீபாதனையும் நடைபெற்றது.
பின்னர் இன்று பல்வேறு ஆலயங்களில் பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பான முறையில் அன்னதானமும் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் சங்கடஹரா சதுர்த்தி மற்றும் பஞ்சமி திதி வாராகி அம்மன் அபிஷேகத்தின் நிகழ்ச்சிகளை ஏராளமான ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)