கின்னஸ் புத்தகத்தில் இடம்.. குடும்பத்துக்கே ராணி.. உலகின் வயதான நாய் பெபில்ஸ் மறைவு..
உலகின் மிக வயதான நாய் பெபில்ஸ் தனது 22வது வயதில் உயிரைவிட்டது. டெடி ஃபாக்ஸ் டெரியர் என்ற வகையறா நாயான பெபில்ஸ் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.
உலகின் மிக வயதான நாய் பெபில்ஸ் தனது 22வது வயதில் உயிரைவிட்டது. டெடி ஃபாக்ஸ் டெரியர் என்ற வகையறா நாயான பெபில்ஸ் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் வசித்துவந்த இந்த நாய்க்குட்டிக்கு அவரது உரிமையாளர்கள் நெகிழ்ச்சி பொங்க பிரியாவிடை கொடுத்தனர். தனது 23 வயதை எட்ட 5 நாட்களே இருந்த நிலையில் பெபில்ஸின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. க்ரெகரி குடும்பத்தினர் இந்த நாயை வளர்த்து வந்தனர்.
View this post on Instagram
View this post on Instagram
க்ரெகரி குடும்பத்தினர், "பெபில்ஸ் மகிழ்ச்சியான நீண்ட வாழ்க்கை வாழ்ந்தது. அதுதான் எங்கள் வீட்டின் ராணியாக இருந்தது. அதன் இணையான ராக்கி 2017ல் இறந்தது. அப்போது அதற்கு வயது 16. பெப்பில்ஸ் தனது வாழ்நாளில் 32 குட்டிகளை ஈன்றது. மூன்று முறை அது குட்டிகளை ஈன்றது" என்றனர்.
பெபில்ஸுக்கு இசையின் மீது ஈர்ப்பு அதிகம். புதுப்புது உணவுகளை உண்பதில் ஆர்வம் அதிகம். 2012 ஆம் ஆண்டு முதல் பெபில்ஸுக்கு பூனைகளுக்கான உணவு கொடுக்கிறோம். காரணம் அதில் நாய் உணவைவிட அதிகமான அளவு புரதம் இருந்தது என்பதால் அவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது. பெபில்ஸ் தனது குட்டிகளை அத்தனை அன்புடன் அரவணைக்குமாம்.