உலகளவில் 15.89 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 15 கோடியே 89 லட்சத்து 53 ஆயிரத்து 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 64 லட்சத்து 79 ஆயிரத்து 915 ஆக உள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 15 கோடியே 89 லட்சத்து 53 ஆயிரத்து 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 6 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13 கோடியே 64 லட்சத்து 79 ஆயிரத்து 915 ஆக உள்ளது. ஒரு கோடியே 91 லட்சத்து 66 ஆயிரத்து 963 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 153 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.உலகளவில் 15.89 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா தொற்று பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் புதிதாக 22 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 241 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 3 கோடியே 34 லட்சத்து 76 ஆயிரத்து 784 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 95 ஆயிரத்து 812 பேர் உயிரிழந்துள்ளனர்.பிரேசிலில் ஒரே நாளில் 34 ஆயிரத்து 162  பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 934 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் ஒரு கோடியே 51 லட்சத்து 84 ஆயிரத்து 790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 22 ஆயிரத்து 418 யை கடந்துள்ளது.
 
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்திலும் பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் நேற்று கொரோனா தொற்றால் 15.88 கோடி பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்தை கடந்தது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13.63 கோடியாக இருந்தது.  1.83 கோடி பேர் சிகிச்சை பெற்றனர். இதில், 1.07  லட்சத்துத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.இந்தியாவில் நேற்று 4 லட்சத்து 9 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று புதிதாக கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 4 ஆயிரத்து 133 பேர்  கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.

பொதுமக்கள் முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

Tags: india America Corona update brazil wolrd

தொடர்புடைய செய்திகள்

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

George Floyd | கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாயிட் கொலையை வீடியோ பதிவுசெய்த பெண்ணுக்கு புலிட்சர் பரிசு !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

உரிமையாளர் சென்ற ஆம்புலன்ஸை பின் தொடர்ந்த பாசக்கார நாய்- வைரலாகும் வீடியோ !

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

G7 Summit: ஜி 7 உச்சி மாநாடு தொடக்கம்: ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசி தானம்!

கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!

கோவாக்சினுக்கு அங்கீகாரம் தர அமெரிக்கா மறுப்பு; மனுவை தள்ளுபடி செய்தது!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

உடல்நலம் குன்றிய எஜமானர் : மருத்துவமனை வாசலிலேயே தவமிருந்த செல்ல நாய்.. துருக்கியில் நெகிழ்ச்சி!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News :தமிழ்நாட்டில் இன்று 15,108 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

சென்னை : நீலாங்கரையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு, விற்க முயன்ற 3 இளைஞர்கள் கைது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!

புதிய வேலையில் களமிறங்கிய பிக்பாஸ் நிஷா : வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரீஸ்..!