மேலும் அறிய

Maria Telkes : யார் இந்த மரியா டெல்கெஸ்? கூகுள் கொண்டாடும் சன் குயின் யார் தெரியுமா?

Maria Telkes : விஞ்ஞானி மரியா டெல்கெஸின் பிறந்தநாள் இன்று.

Maria Telkes : விஞ்ஞானி மரியா டெல்கெஸ் (Maria Telkes)-ன் பிறந்த நாளை போற்றும் விதமாக கூகுள் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களிலும், பல்வேறு துறைகளில் சிறந்தவர்களை சிறப்பிக்கும் வகையில் டூடுள் வெளியிடுவது வழக்கம். சோலார் எனர்ஜி, அதாவது சூரிய மின்னாற்றலை கண்டெடுத்த முன்னோடியாக கருதப்படுவர் மரியா டெல்கெஸ். இவருடைய 122-வது பிறந்தநாள் இன்று. இவருடைய சாதனைகள் குறித்து விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் சூரிய சக்திதான் இந்த பூமியில் உற்பத்திக்கு மூல ஆதாரமாக இருப்பதைக் குறிப்பிட்டும், அதோடு மரியா டெல்கெஸ் புகைப்படத்தையும் சேர்த்து டூடுள் வெளியிட்டுள்ளது.

மரியா டெல்கெஸ்
மரியா டெல்கெஸ்

யார் இந்த மரியா டெல்கெஸ்?

டாக்டர். மரியா டெல்கெஸ் ஹங்கேரி நாட்டில் உள்ள புத்தபெஸ்டில் பிறந்தவர். உலகின் முதல் முறையாக தி சொசைட்டி ஆஃப் உமென் இஞ்சினியர்ஸ் அச்சிவ்மெண்ட் அவார்ட் (the Society of Women Engineers Achievement Award’) என்ற விருதை பெற்றவர் மரியா என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் துறையில் இவரின் சாதனைகளுக்காக 1952-ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது. 

அறிவியல் கண்டுப்பிடிப்புகளில் மரியாவின் பங்களிப்பு அளப்பறியது. பூமியில் மனிதர்களின் வாழ்வினை மாற்றுவதற்கான சக்தி சூரிய சக்தி உண்டு என்பதை மரியா மிகவும் நம்பியவர். அவருடைய வாழ்நாள் முழுவதும் சூரிய சக்தி துறை ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 

சோலார் வீடு
சோலார் வீடு

 

தி சன் குயின்:

இன்றைக்கு நாம் சூரிய சக்தியை பயன்படுத்தி வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் மரியா. சூரிய சக்தியை கொண்டு செயல்படும் குக்குர் உள்ளிட்ட சூரிய மின்னாற்றல் ஆகியவற்றிற்கு மரியாவின் ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுப்பிடிப்புகள் முன்னோடி எனலாம். ஏனெனில், மரியா சூரிய சக்தியின் பயன்பாடுகள் குறித்து தீவிரமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். அதிலிருந்து கிடைத்த ஆய்வு முடிவுகளைக் கொண்டு பல்வேறு கண்டுப்பிடிப்புகளை மானுட வளர்ச்சிக்கு வழங்கியுள்ளார். 

மரியா, சிறு வயது முதலே அறிவியலில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். 1920- இல் தனது இளங்கலை கல்வியை வேதியியல் துறையில் முடித்தார்.பின்னர், 1924-இல் அமெரிக்கா சென்று படித்து முனைவர் பட்டம் பெற்றார். 

1937-ஆம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமை பெற்றவர், மசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் (Massachusetts Institute of Technology (MIT)) சோலார் எனர்ஜி கமிட்டியில் (Solar Energy Committee) முக்கிய நிர்வாகியாக இருந்தார். 

இரண்டாம் உலகப் போரின் போது, இவர் சோலார் டிஸ்டில்லரை கண்டுபிடித்தார். அதாவது சூரிய சக்தியின் மூலம் கடல் நீரை குடிநீராக மாற்றும் கருவியை கண்டறிந்தார். இது உலகப் போரின் போது மிகவும் உதவியாக இருந்தது. இது பசுபிக் போரின்போதும் பயன்படுத்தப்பட்டது. 

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு  MIT-யில் இணை பேராசிரியராக பணி புரிந்தார். அங்கு சோலார் ஹீட்டட் வீடுகளை (habitable solar-heated homes ) உருவாக்கும் திட்டத்தில் முக்கிய பங்காற்றினார். 

எலினார் ரேமண்ட் என்பவருடன் இணைந்து (Eleanor Raymond) தனியார் நிறுவனங்களின் நிதியுதயுடன் 1948-ஆம் ஆண்டில் டோவர்ச் சோலார் வீட்டை (Dover Sun House)  மரியா உருவாக்கினார். இது பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவர் பல்வேறு நிறுவனங்களுக்கு கன்சல்டண்டாக பணியாற்றினார். 

இவர் ஃபோர்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் சோலார் ஓவன் - ஐ கண்டுப்பிடித்தார். சூரியனின் சக்தியால் பூமியில் பலவற்றை உருவாக்க முடியும் என்றும் நம்பியவரின் சாதனைகளை போற்றி அவரை ’சன் குயின்’ (Sun queen) என்று அழைக்கப்படுகிறார்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget