மேலும் அறிய

Joe Biden Diwali : வெள்ளை மாளிகையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட தீபாவளி..

Diwali : தீபாவளியை ஒட்டி வெள்ளை மாளிகையில் மிகப்பெரிய அளவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதிபர் ஜோ பிடன் நிர்வாகத்தைச் சேர்ந்த பல இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.

வாஷிங்டன்: தீபாவளியை ஒட்டி  வெள்ளை மாளிகையில் மிகப்பெரிய அளவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஜோ பிடன் நிர்வாகத்தைச் சேர்ந்த பல இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.

"உங்களுக்கு விருந்தளிப்பதில் பெருமையடைகிறோம். இதுவே வெள்ளை மாளிகையில் நடைபெறும் முதல் பிரமாண்டமான தீபாவளி நிகழ்ச்சி. வரலாற்றில் முன்னெப்போதையும் விட அதிகமான ஆசிய அமெரிக்கர்கள் இங்கு உள்ளனர், தீபாவளி கொண்டாட்டத்தை மகிழ்ச்சியான பகுதியாக மாற்றியதற்கு நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் " என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வரவேற்பு நிகழ்ச்சியில் கூறினார்.

அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகெங்கிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த ஜோ பிடன், தீபாவளி கொண்டாட்டத்தை மகிழ்ச்சியானதாக மாற்றியதற்காக அமெரிக்காவில் உள்ள ஆசிய அமெரிக்க சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார். 

"வெள்ளை மாளிகையையில்  தீபாவளி நிகழ்ச்சி நடத்துகையில், அமெரிக்க வரலாற்றில் மிகவும் மாறுபட்ட முறையில் தீபத்தை ஏற்றி, நிர்வாகத்தின் உறுப்பினர்களுடன் இனைந்து கொண்டாடுவதில் பெருமைப்படுகிறோம்  எனவும், முதல் கறுப்பின அமெரிக்கர் மற்றும் தெற்காசிய அமெரிக்கர் - துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் தலைமையிலான நடைபெறுவது கூடுதல் சிறப்பு ." அமெரிக்கா முழுவதிலும் உள்ள தெற்காசிய சமூகம் வெளிப்படுத்திய நம்பிக்கை, தைரியம் மற்றும் அன்பிற்கு பிடன் நன்றி தெரிவித்தார்.

இந்த தீப ஒளி திருனாளை உலகம் முழுவதும்  கொண்டாடும்போது, ​​ஜோ பிடன், "இந்த சமூகம் அடிக்கடி பல்வேறு இருள் சூழ்ந்த சம்பவங்களை சந்தித்து வருகிறது.  இதுபோன்ற சூழலில்  நாம் அனைவரும் சமமாக நின்று உறுதியாக போராடுகிறோம்” எனவும் தெரிவித்தார்.

”தீபாவளி என்பது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, உலகம் முழுவதும் இருந்தாலும் சரி, உலகிற்கு ஒளியைக் கொண்டுவரும் ஆற்றல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது"  என குறிப்பிட்டார்.

"பிரார்த்தனைகள், நடனங்கள், வாணவேடிக்கைகள் மற்றும் இனிப்புகளுடன், தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும், சமூகத்தின் பெருமையை உணரவும், அனைவரும் எப்போதும் ஒன்றாக தோளோடு தோள் சேர்த்து நிர்க்கவும் நினைவில் கொள்ள வேண்டும்" என்று பிடன் கூறினார்.

மேலும், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும் தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி வெள்ளை மாளிகையில் இருந்து பேசுகையில்,  "வெள்ளை மாளிகை என்பது மக்களின் வீடு, நம் நாட்டு ஜனாதிபதி, ஒவ்வொரு அமெரிக்கரும் சாதி, மதங்களை கடந்து  தங்கள் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் இந்த இடத்தை உருவாக்கியுள்ளனர்" என்று அவர் கூறினார்.

துணை அதிபர் கமலா ஹாரிஸ் மேலும் கூறுகையில், ”பிடென் நிர்வாகம் உலகெங்கிலும் உள்ள பலநூறு கோடிக்கும் அதிகமானவர்கள் தீபத்தை ஏற்றி தீமைக்கு எதிரான நன்மைக்கான போராட்டத்தையும், அறியாமைக்கு எதிரான அறிவையும், இருளுக்கு எதிரான ஒளியையும் குறிக்கும் வகையில் தீபாவளியை கொண்டாடிகிறார்கள். "விடாமுயற்சியுடன், நம்பிக்கையுடன், அன்புடன், இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வெள்ளை மாளிகை என்பது அனைவருக்கும் சொந்தமான வீடு" என்று ஜில் பிடன் கூறினார்.

தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கும் ஒரு மங்களகரமான பண்டிகை தீபாவளி.  கண்கவர் விளக்குகள், பட்டாசுகள், தவிர்க்க முடியாத பாரம்பரிய இனிப்புகள் மற்றும் பரிசுகளை பரிமாறி விழாவை குறிக்கும். 14 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு ராமர் வீடு திரும்பியதையும், ராவணனை வென்றதையும் நினைவுகூரும் வகையில் இந்த விழாவைக் கொண்டாடப்படுகிறது.

தீபாவளி "ஒளியின் திருவிழா", மேலும் இது ஐந்து நாட்களுக்கு இடைவிடாமல் அனுசரிக்கப்படுகிறது, சந்திர சூரிய இந்து நாட்காட்டியின்படி கார்த்திகை மாத தொடக்கத்தில் முடிவடைகிறது. திருவிழாவின் ஒவ்வொரு நாளும் ஆறு வெவ்வேறு முக்கிய கதைகளுடன் தொடர்புடையது.  வட இந்தியாவில், விநாயகப் பெருமானையும், செல்வத்தின் தெய்வமான லக்ஷ்மியையும் வழிபடுவது, செழிப்பு மற்றும் செல்வத்தை வரவேற்பதைக் குறிப்பது தீபாவளி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget