Watch Video| நீரூற்றில் காசுகளை சுண்டிவிட்ட பிரதமர் மோடி உள்ளிட்ட G20 தலைவர்கள்... எதற்காக தெரியுமா? வைரலாகும் வீடியோ..
பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் பின்னோக்கி நின்றவாறு நீரூற்றினுள் நாணயங்களை வீசினர்.
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய G20 நாடுகளின் மாநாடு ரோம் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து மற்ற உலகத் தலைவர்களுடன் ரோமின் பிரபல ட்ரேவி நீருற்றுக்குச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.
இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. ஜி20 கூட்டமைப்புக்கு தற்போது இத்தாலி தலைமை வகிப்பதால் ரோம் நகரில் இம்மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டின் போது அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
Joined the @g20org leaders at Rome’s beautiful Trevi Fountain. pic.twitter.com/cKDjrKmbOI
— Narendra Modi (@narendramodi) October 31, 2021
இந்நிலையில் ட்ரேவி நீருற்று இத்தாலியில் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருக்கிறது. பின்னால் திரும்பியவாறே தோள்களுக்கு பின்னே நீரூற்றில் நாணயத்தை வீசினால் மீண்டும் ரோமிற்கு திரும்ப வருவார்கள் என்பது நம்பிக்கை. இதையடுத்து பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் பின்னோக்கி நின்றவாறு நீரூற்றினுள் நாணயங்களை வீசினர்.
WATCH: Some of the visiting G20 leaders threw coins into the Trevi Fountain in Rome. Tradition has it that if you toss a coin into the fountain, you’ll return to the city pic.twitter.com/4cULeq4Im9
— Reuters Asia (@ReutersAsia) November 1, 2021
காயினை வீசினால் மீண்டும் ரோமிற்கு திரும்ப வருவார்கள் என நம்பிக்கை சொல்கிறது. ஆனால் கோவிட் 19-க்கு முந்தைய சூழலுக்கு உலகமே திரும்ப வேண்டும் என்பதுதான் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ட்வீட் செய்துள்ளார்.
This moment meant much to me. Tradition says tossing a coin into Trevi Fountain ensures a return to Rome.
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) October 31, 2021
But going through my mind was the need for the 🌍 to return to the way it was pre-#COVID19.
The power is in our hands, from @g20org leaders to us all, to end the pandemic. pic.twitter.com/6vNswTfBgP
இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ளவில்லை.