ஆத்தி.. இதெல்லாம் ஒரு கின்னஸ் ரெக்கார்டா?- விழித்துப் பார்த்தே சாதித்த நபர்!
இதெல்லாம் ஒரு சாதனையா என்று நாம் நினைக்கக் கூடிய விஷயங்களைக் கூட செய்து காட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றோர் ஏராளமானோர் உள்ளனர்.
இதெல்லாம் ஒரு சாதனையா என்று நாம் நினைக்கக் கூடிய விஷயங்களைக் கூட செய்து காட்டி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றோர் ஏராளமானோர் உள்ளனர். அந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் பிரேசிலைச் சேர்ந்த நபர் ஒருவர்.
பிரேசிலைச் சேர்ந்த சிட்னி டே கார்வால்ஹோ மெஸ்குவிட்டா தனது கண்ணை நன்றாக வெளியில் துருத்தி விழித்து சாதனை படைத்துள்ளார். இவருக்கு டியோ சிக்கோ என்ற செல்லப் பெயரும் இருக்கிறது. இந்நிலையில் இவர் தனது கண்ணின் வெள்ளை மற்றும் கருவிழியை வெளியே துரத்தும் அளவுக்கு 18.2 மிமீ (0.71 இன்ச்) அளவுக்கு விழித்து பார்த்துள்ளார். இவர் இந்தச் சாதனையை கடந்த ஜனவரி 10ல் செய்துள்ளார்.
இவர் இந்தத் திறமையை தனது 9வது வயதிலிருந்து வளர்த்துக் கொண்டிருக்கிறார். அப்போதெல்லாம் அதனை வைத்து நண்பர்களை மகிழ்விப்பதும் கண்ணாடி முன்னர் நின்று தானே மகிழ்ந்து கொள்வதுமாக இருந்துள்ளார். பின்னர் தான் அவருக்கு இதனை ஏன் கின்னஸ் சாதனையாக செய்யக் கூடாது என்ற அவருக்கு வந்துள்ளது. அதற்கான பயிற்சிகளை முறையாக எடுத்துக் கொண்டார். பின்னர் அந்த சாதனையை நிகழ்த்தியும் விட்டார்.
View this post on Instagram
கின்னஸ் சாதனை புத்தக வரலாறு:
உலக சாதனைகள் பற்றி வெளிவரும் இந்த "Guinness World Records" என்பதே ஒரு உலக சாதனையை படைத்த புத்தகம்.சகோதரர்கள் நோரிஸ், ராஸ் மேக்விட்டர் என்பவர்களால் ஆகஸ்டு 1954ல் தொடங்கப்பட்டது. 27 ஆகஸ்டு 1955 இல் இவர்கள் முதல் பதிப்பு வெளிவிடப்பட்டது. இதன் 2019 பதிப்பு நூறு நாடுகளில், 23 உலக மொழிகளில், பதிப்பிக்கப்பட்டது.
சர் ஹ்யூக் பீவர் (Sir Hugh Beaver) என்பவர் கின்னஸ் ப்ருவரீஸ் (Guinness Breweries) என்ற நிறுவனத்தின் இயக்குனராக இருந்தவர். 1951ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் அயர்லாந்து நாட்டில் வேட்டையாட சென்றபோது, இவர் சுட்ட தங்கப் புறா (Golden Plover) எனப்படும் பறவை தப்பிப் பறந்தது. அன்று மாலை உலகத்திலேயே வேகமாக பறந்து விடக்கூடிய பறவை எது என்ற விவாதத்தில் ஒரு சரியான முடிவுக்கு வரமுடியாமல் போனது.
அப்போது அவருக்கு இதுபோல உலக மக்கள் அறியாத பல விஷயங்கள் இருக்கக் கூடும் என்று தோன்றியது. இந்த சாதனை புத்தகம் அதன் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து அச்சடிக்கப்பட்டது. இது ஆண்டுதோறும் வெளிவந்து இந்த நிறுவனம் வளர்ந்துள்ளது.