RIP Kabosu: மீம்ஸ் மூலம் பிரபலமடைந்த நாய் கபோசு மரணம் - சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கண்ணீர்!
Meme Dog Dead: மீம்ஸ்களால் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம் வாய்ந்த கபோசு நாய் இன்று உயிரிழந்தது. அதன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மீம் கிரியேட்டர்ஸ்களின் நாயகனாகவும், சமூக ஊடக பயனர்களின் பலரது ரியாக்சனாகவும் இருந்த கபோசு நாய் இறந்த செய்தி பலருக்கும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கபோசு:
சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமடைந்த ”கபோசு” என்ற பெயர் கொண்ட நாய், ”ஷிபா இனு” என்ற இன வகையைச் சேர்ந்தது என கூறப்படுகிறது. இதற்கு 19 வயது என தகவல் தெரிவிக்கின்றன. எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை வாங்கிய பின், முன்பு இருந்த பறவை லோகோவை மாற்றினார். பின்னர் நாய் புகைப்படத்தை மாற்றினாரே, அந்த நாய்தான் இந்த கபோசு.
மீம்ஸ்களின் நாயகன்:
இந்த நாயானது, மீம்ஸ் போடுவர்களுக்கு மிக நெருக்கமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த நாயின் ரியாக்சன் வேற லெவலில் இருக்கும் என்றே பலரும் தெரிவிக்கின்றனர். சில கருத்துக்களுக்கு, பதில் தெரிவிப்பதற்காக , இந்த நாய் ரியாக்சனின் புகைப்படத்தை அனுப்பினாலே போதும். எதையும் விரிவாக சொல்ல தேவையில்லை. அதனால், இந்த நாய் புகைபப்டத்தை பலரும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.
எப்போது நினைவில்:
கபோசு மே 24 இன்று இறந்ததாக , ஜப்பான் நாட்டைச் சேர்ந்த, அந்த நாயின் உரிமையாளர் இது உறுதிப்படுத்தியுள்ளார். இவர் 2008 ஆம் ஆண்டு கபோசுவைத் தத்தெடுத்து வளர்த்து வந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். அவர் தெரிவித்ததாவது, கடந்த சில வருடங்களாக கபோசு உடல் நலக்குறைவால் போராடி வந்தது. கடந்த 2022 இல் பித்தப்பை மற்றும் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டது. பின்னர் புற்றுநோயின் வகை கண்டறியப்பட்டது என்றும் தெரிவித்தார்.
doge will live forever 🖤 pic.twitter.com/cynlQ2DyHr
— DogeDesigner (@cb_doge) May 24, 2024
கபோசுவின் பிரியாவிடை வரும் மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று கூறப்படுகிறது. ஜப்பானிய நாயின் மறைவுக்கு நெட்டிசன்கள் பலரும் , தங்களது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Kabosu, gone but not forgotten 🧡 pic.twitter.com/zmunVKlaAn
— Archax Crypto (@ArchaxCrypto) May 24, 2024
கபோசு நம்முடன் இப்போது இல்லை, ஆனால் என்றும் நம் நினைவில் எப்போதும் இருக்கும் என்று பலர் தெரிவித்துள்ளனர்.
Rip Kabosu
— Kabosu (@EthKabosu) May 24, 2024
Also Read: Salt Spoon: உப்புச் சுவையைத் தரும் மின்சார கரண்டி: ஜப்பான் காரன்!...ஜப்பான் காரன்தாயா!...