US Capitol Alarm: அமெரிக்க நாடாளுமன்றத்தை நடுநடுங்க வைத்த அபாய ஒலி.... நடந்தது என்ன?
அமெரிக்க நாடாளுமன்றத்தில் திடீரென்று அபாய ஒலி சத்தம் கேட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நேற்று மாலை 4.45 மணியளவில் திடீரென்று அபாய ஒலி சத்தம் கேட்டுள்ளது. இதன்காரணமாக அங்கு இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அதில் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசியையும் பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக ஒரு அறையில் தங்க வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் படங்கள் ட்விட்டர் தளத்தில் வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது. இந்த அபாய ஒலி சத்தம் கேட்கும் போது அங்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் சபாநாயகருடன் ஆலோசனை மேற்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவர்கள் அனைவரையும் பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த அபாய ஒலி தொடர்பாக சோதனை நடத்தியுள்ளனர்.
Pelosi evacuating -> pic.twitter.com/Gr8UdDjqdk
— Andrew Solender (@AndrewSolender) September 13, 2022
அப்போது அந்த ஒலி நாடாளுமன்றத்தின் அடிதளத்தில் ஏற்பட்ட தண்ணீர் பைப் உடைப்பு காரணமாக எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதை சரி செய்த பின்னர் அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அவர்களுடைய இடத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஒரு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Things are happening in the Capitol basement pic.twitter.com/DiYBW8WSTE
— Andrew Solender (@AndrewSolender) September 13, 2022
அலறும் அமெரிக்கா... மீண்டும் ஒரு துப்பாக்கி சுடுதல் சம்பவம்... 8 பேர் உயிரிழப்பு?:
அமெரிக்காவில் அவ்வப்போது துப்பாக்கிச் சுடுதல் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 8 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ பகுதியில் இருக்கும் வாஷிங்டன் பூங்காவின் அருகே ஒரு துப்பாக்கி சுடுதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சுடுதல் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் தற்போது வரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சுடுதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் இந்த இடத்தில் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பூங்கா ஒன்றில் இரவு நேரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயம் அடைந்த 4 பேரை மீட்புப்படையினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் மூன்று பேர் சற்று ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிகிறது. ஒருவர் சற்று நலமாக உள்ளதாக கருதப்படுகிறது. இதன்காரணமாக இந்த துப்பாக்கி சுடுதல் சம்பவத்தில் உயிரிழிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க:உங்களை ஒருமுறை கட்டிப்பிடிக்கலாமா? அழுத பெண்ணுக்கு ஆறுதல் தெரிவித்த மேகன் மார்க்லே..!