மேலும் அறிய

Parag Agrawal Salary | ட்விட்டரின் புது CEO-வாகும் பரக் அக்ராவலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ட்விட்டர் சிஇஓ பரக் அக்ராவல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை நேற்று இரவு முதல் பேசு பொருளாக்கி வந்தவர்களுக்கு அடுத்த தகவல் அசைபோட கிடைத்துவிட்டது.

ட்விட்டர் சிஇஓ பரக் அக்ராவல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதை நேற்று இரவு முதல் பேசு பொருளாக்கி வந்தவர்களுக்கு அடுத்த தகவல் அசைபோட கிடைத்துவிட்டது.

பரக் அக்ராவலின் சம்பளம் பற்றியது அது. ட்விட்டர்  சிஇஓ பரக் அக்ராவலுக்கு ஆண்டுக்கு 1.40 மில்லியன் அமெரிக்க டாலர் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் பராக் அகர்வாலின் ஆண்டு வருமானம் ரூ.10,51,57,220.00. அதாவது பத்து கோடியே ஐம்பத்தோரு லட்சத்து ஐம்பத்தி ஏழாயிரத்து இருநூற்று இருபது மட்டுமே (Ten Crore Fifty One Lakh Fifty Seven Thousand Two Hundred Twenty)

நவம்பர் 29,2021 தேதியிட்ட பரக் அக்ராவலுக்கு ட்விட்டர் நிறுவனம் பணி ஆணை வழங்கியுள்ளது. அவருக்கு இனி ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்கன் டாலர் ஊதியமாக வழங்கப்படும். அதுதவிர அவருடைய அடிப்படைச் சம்பளத்தில் இருந்து 150% ஆண்டுக்கான போனஸாக வழங்கப்படும். இது தவிர ரெஸ்ட்ரிக்டர் ஸ்டாக் யூனிட்ஸ் (RSU) வாயிலாக 12.5 மில்லியன் டாலர் கிடைக்கப் பெறுவார். பரக் அக்ராவலுக்கு ஓராண்டுக்கு 16 சமமான அளவிலான சம்பள உயர்வு வழங்கப்படும்.

இது தவிர ட்விட்டர் ஊழியர்களுக்கான சலுகைத் திட்டங்கள் அனைத்துமே இவருக்குப் பொருந்தும். மேலும், செயல்திறனுக்கு ஏற்ப அலவன்ஸ்களும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

யார் இந்த பரக் அக்ராவல்?

ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஒவாக ஜேக் டார்சி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் அவர் திடீரென அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக பரக் அக்ராவல் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய ஐஐடி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடி பாம்பேவில் (IIT BOMBAY) பரக் அக்ராவல் இளங்கலை பட்டத்தை முடித்தார். அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழக்கத்தில் கணினி அறிவியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.

அந்த சமயத்தில் யாஹூ, மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பயிற்சி பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன்பின்னர் 2011ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் விளம்பரம் தொடர்பாக செயல்படும் பொறியியாளராக பணியில் சேர்ந்தார். அதன்பின்னர் ட்விட்டர் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணியாற்றினார்.

அப்போது ட்விட்டர் தளத்தின் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தியதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. குறிப்பாக பயனாளர்களுக்கு ஏற்ப அவர்களுக்கு ட்வீட்களை காட்டும் செயற்கை நுண்ணறிவு திறனை இவர் மேம்படுத்தினார். அது ட்விட்டர் தளம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கவர்ந்த தளமாக மாற முக்கியமாக உதவி செய்தது. 

இந்தத் துறையில் சிறப்பாக பணி செய்ததன் மூலம் அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு  ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) பொறுப்பை பெற்றார்.  

அப்போது முதல் ட்விட்டர் நிறுவனத்தின் சிடிஓவாக ட்விட்டர் தொழில்நுட்பங்களில் பல முக்கிய விஷயங்களை கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget