Watch Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய பில்டிங்.. தொடர்ந்து செய்தி வாசித்த செய்தி தொகுப்பாளர்.. வைரலாகும் வீடியோ!
6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் மையம் கொண்டு பாகிஸ்தானையும் உலுக்கியது.
நேற்று இரவு இந்தியாவின் தேசிய தலைநகர் டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அதேபோல், 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் மையம் கொண்டு பாகிஸ்தானையும் உலுக்கியது. இதில், 9 பேர் உயிரிழந்ததாகவும், 160 க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் செய்திகள் பரவின. தொடர்ந்து , ஆப்கானிஸ்தானிலும் இந்த நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியது.
இந்தநிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டபோது தியடைந்த குடிமக்கள் வெளியேறுவதை தொலைக்காட்சி காட்சிகள் காட்டின. பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஸ்டுடியோ பயங்கரமாக குலுங்கினாலும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் செய்தி வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Pashto TV channel Mahshriq TV during the earthquake. Bravo anchor continued his live program in the ongoing earthquake.
— Inam Azal Afridi (@Azalafridi10) March 21, 2023
#earthquake #Peshawar pic.twitter.com/WC84PAdfZ6
நிலநடுக்கம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியபோதும் தொலைக்காட்சி தொகுப்பாளர் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தாமல், அனைத்தும் இயல்பானது போல் தொடர்ந்து செய்திகளை அளித்தார். இந்த வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டானபோது, கமெண்ட்டில் ட்விட்டர் பயனர் ஒருவர், "பூகம்பத்தின் போது பாஷ்டோ டிவி சேனல் மஹ்ஷ்ரிக் டிவி. பிராவோ தொகுப்பாளர் நிலநடுக்கத்தில் தனது நேரடி நிகழ்ச்சியைத் தொடர்ந்தார். இதுதான் உண்மையான வேலைக்கான அர்ப்பணிப்பு” என பதிவிட்டிருந்தார்.
மீண்டும் டெல்லியில் நிலநடுக்கம்:
டெல்லியில் புதன்கிழமை மாலை 4.22 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. முன்னதாக, டெல்லியில் செவ்வாய்க்கிழமை இரவும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
டெல்லி-என்சிஆர், சண்டிகர் மற்றும் பஞ்சாப் போன்ற வட இந்தியாவின் சில பகுதிகளிலும் நடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது பலர் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். பலர் தங்கள் வீடுகளில் உள்ள பொருள்களை எடுத்தும் செல்லும் வீடியோக்களையும் ஒரு சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.