watch video : புயல்னா... இது தான்யா புயல்... இஸ்தான்புல்லை கதம் செய்யும் புயல்!
துருக்கி, இஸ்தான்புல் நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த புயல் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
துருக்கி, இஸ்தான்புல் நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த புயல் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை கடுமையான புயல்கள், பலத்த காற்று மற்றும் அதிக மழைப்பொழிவு போன்ற இயற்கை பேரழிவுகளால் துருக்கி மோசமான நிலையை சந்திக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
கடந்த திங்களன்று மேற்கு மற்றும் தெற்கில் உள்ள மர்மாரா, ஏஜியன் மற்றும் மத்திய தரைக்கடல் போன்ற சில பகுதிகளை புயல் தாக்கியதில் ஏராளமான வீடுகள் பாதிப்புக்குள்ளானது. சுவர்கள், கூரைகள் மற்றும் கட்டிடங்களின் துண்டுகள் இடிந்து விழுந்ததில், இஸ்தான்புல்லில் நான்கு பேரும், சோங்குல்டாக் மற்றும் கோகேலி மாகாணங்களில் தலா ஒருவர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் பலர் காயம் அடைந்தனர்.
தொடர்ந்து, வருகிற நாட்களில் நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் வெப்பநிலை 8 செல்சியஸ் டிகிரி வரை குறையும் என்றும், நாட்டின் மேற்கில் இருந்து கிழக்கே கனமழை பெய்யும் என TSMS எச்சரித்துள்ளது.
இந்த மோசமான சீதோஷ்ணம் காரணமாக அங்கு மக்கள் வாழ்வதே கடினமாகி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது. மேலும், 24 மணி நேரமும் பொதுமக்களை பாதுகாக்க அவசர உதவி எண்ணையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
பலத்த காற்று மேற்கு மாகாணங்களில் அன்றாட மக்களின் வாழ்க்கையை பாதித்தது. நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான இஸ்தான்புல் மிக மோசமாக பாதிக்கப்பட்டது, புயல்கள் ஒரு சிறிய கடிகார கோபுரத்தைத் தகர்த்தன, டிரக்குகளை கவிழ்த்துவிட்டன மற்றும் கூரைகளை கிழித்தெறிந்தன. மோசமான வானிலை காரணமாக அனைத்துப் பள்ளிகளுக்கும் செவ்வாய்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக நகர ஆட்சியர் அறிவித்துள்ளார்.
2020 இல் அதிக எண்ணிக்கையிலான வானிலை தொடர்பான பேரழிவுகளைக் கண்ட நாடுகளின் பட்டியலில் இஸ்தான்புல் முதலிடத்தில் உள்ளது. பெரும்பாலும் வெள்ளம். மாறிவரும் வானிலை நிலைமைகளுக்கு காலநிலை மாற்றமே முக்கியக் காரணம் என நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த ஆண்டு,இஸ்தான்புல்லில் நாட்டில் 984 வானிலை தொடர்பான பேரழிவுகள் பதிவாகியுள்ளது என்றும், அவற்றின் தாக்கம் முந்தைய ஆண்டுகளை விட அதிகம் என்றும் தெரிவிக்கின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்