Turkey Earthquake: அடுத்தடுத்து 3 சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் துருக்கி சிரியா..? பலி எண்ணிக்கை 1600 ஆக உயர்வு..!
Turkey Earthquake: துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,600க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.
Turkey Earthquake: துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,600க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணியில் இருந்து 8 மணிக்குள் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவானது. இந்நிலையில் மீட்புப் பணிகள் இரு நாட்டு அரசுகளும் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அதாவது இந்திய நேரப்படி இரவு 7 மணி அளவில் மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0வாக பதிவாகியுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இதுவரை 1,600க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால் குடும்பத்தினரையும் நண்பர்களையும் இழந்த மக்கள் தற்போது பீதியில் உள்ளனர்.