Modi and Trump : "இதுதாண்டா நட்பு!" மோடி சொன்ன ஒற்றை வார்த்தை... உடனே வரவேற்ற ட்ரம்ப்! அப்படி என்ன நடந்துச்சு?
Modi and Trump : காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான திட்டத்தை டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியதற்கு ட்ரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Modi and Trump : காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியதற்கு ட்ரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - காசா போர்:
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். இதில், உடனடி போர்நிறுத்தம், இஸ்ரேலால் பிடிக்கப்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்வது, காசாவிலிருந்து இஸ்ரேலிய படைகள் படிப்படியாக வெளியேறுவது என்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் - காசா இடையேயான போரை நிறுத்த, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் ட்ரம்ப்-நெதன்யாகு-வின் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது 20 அம்ச காசா போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புக்கொண்டதாக ட்ரம்ப் கூறியிருந்தார். அதேபோல், இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், ஹமாஸால் பிடிக்கப்பட்ட கடைசி பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்படும் போது, "போர் உடனடியாக முடிவடையும்" என்று 20 அம்சத் திட்டம் கூறுகிறது. அந்த ஆரம்ப காலகட்டத்தில், போர் நிறுத்தம் இருக்கும். தற்காலிக சர்வதேச உறுதிப்படுத்துதல் படை மற்றும் ட்ரம்ப் தலைமையிலான ஒரு இடைநிலை அதிகாரத்தை உருவாக்குவது.
இந்த ஒப்பந்தம், ஹமாஸ் போராளிகளை முழுமையாக நிராயுதபாணியாக்க வேண்டும் மற்றும் அரசாங்கத்தில் எதிர்கால பாதிரங்களில் இருந்து விலக்கப்பட வேண்டும். இருப்பினும், அமைதியான சகவாழ்வுக்கு ஒப்புக்கொண்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்பட்டபின், உதவி மற்றும் முதலீடுகளுக்காக எல்லை திறக்கப்படும்.
ட்ரம்பின் முந்தைய வெளிப்படையான இலக்குகளிலிருந்து ஒரு முக்கியமான மாற்றமாக, பாலஸ்தீனியர்கள் வெளியேற நிர்பந்திக்கப்பட மாட்டார்கள். அதற்கு பதிலாக, "மக்கள் தங்குவதை ஊக்குவிப்போம். மேலும், சிறந்த காசாவைக் கட்டியெழுப்ப அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் ட்ரம்ப்.
ஆதரவு அளித்த மோடி:
இச்சூழலில் தான் அமெரிக்காவின் இந்த 20 அம்ச திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (செப்டம்பர் 30) வரவேற்றிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், ”காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விரிவான திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம். இது பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய மக்களுக்கும், பரந்த மேற்கு ஆசிய பிராந்தியத்திற்கும் நீண்டகால மற்றும் நிலையான அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஒரு சாத்தியமான பாதையை வழங்குகிறது.சம்பந்தப்பட்ட அனைவரும் ட்ரம்பின் முன்முயற்சியின் பின்னால் ஒன்றிணைந்து, மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியைப் பாதுகாப்பதற்கான இந்த முயற்சியை ஆதரிப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்”என்றார்.
மோடியின் கருத்தை வரவேற்ற ட்ரம்ப்:

இச்சூழலில் தான் பிரதமர் நரே ந்திர மோடியின் இந்த கருத்தை ஆதரவை வரவேற்றுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இது தொடர்பாக அவர் தன்னுடைய ட்ரூத் சோசியல் சமூக வலைதள பக்கத்தில் மோடியின் பதிவை ReTruthed செய்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






















