மேலும் அறிய

Best Pancakes In The World: உலகளவில் டாப் 10 லிஸ்டில் இடம்பெற்ற தோசை - என்னன்னு தெரியுமா?

Best Pancakes In The World: தோசை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. வகை வகையாக தோசை செய்து காலை உணவை ருசிகரமாக மாற்றலாம்.

தோசை பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. தோசை உலகின் மிகச் சிறந்த (Best Pancakes In The World ) PanCake பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. 

தென்னிந்திய உணவுகளில் பலருக்கும் மிகவும் பிடித்த உணவு வகைகளுள் ஒன்று தோசை. சாதாரண தோசை, மசாலா தோசை, வெங்காய தோசை, ஆனியன் ஊத்தாப்பம், பனீர் தோசை, பீட்ரூட், கேரட் தோசை, சிறுதானிய தோசை, கறி தோசை, மீன்குழம்பு தோசை உள்ளிட்ட பல வகைகளில் தோசை செய்யலாம். 

உளுந்து, அரிசி, வெந்தயம் சேர்த்து அரைக்கப்படும் மாவில் இட்லி, தோசை என விதவிதமாக உணவு செய்யலாம். 

View this post on Instagram
 
A post shared by TasteAtlas (@tasteatlas)

தோசைக்கு 10வது இடம்:

பிரபலமான உணவு மற்றும் பயணங்களை நிர்வகிக்கும் நிறுவனமான TasteAtlas - 2023- 2024 ம் ஆண்டு மிகவும் பிரபலமான உணவுகள் இடங்கள் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் உலகில் சிறந்த உணவகங்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து அது குறித்து விமர்சனம் செய்யும். சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தென்னிந்தியாவின் பிரபல உணவான தோசை பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. 

இந்நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தென்னிந்தியாவின் தோசைக்கு நல்ல ரேட்டிங்க் கிடைத்துள்ளது. இது PanCake பிரிவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு. ’Crêpe' - என்ற மெலிதாக தயாரிக்கப்படும் Pancake  முதலிடம் பிடித்துள்ளது. மசாலா தோசை 12-வது இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக மேங்கோ லஸ்ஸி ‘ 'Best Dairy Beverage In The World' என்ற பெருமையை பெற்றிருந்தது. மசாலா டீ உலகின் இரண்டாவது மிகச் சிறந்த ஆல்ஹகால் இல்லாத பானம் (Second-Best Non-Alcoholic Beverage) என பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தோசை ரெசிபி

தோசை தென்னிந்தியாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் காலை உணவுக்கான தேர்வாகும். தோசைக்கு நோ சொல்லவே முடியாது. தோசை பாரம்பரியமாக உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியுடன் தயாரிக்கப்படுகிறது. இவற்றை மணிக்கணக்கில் ஊறவைத்து, பின்னர் மாவு பதத்துக்கு அரைக்கப்படுகிறது. ஆனால் நேரமின்மை சிக்கல் யாரை விட்டது?  அவர்களுக்காகவே சில நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய தோசை ரெசிபியைக் கண்டுபிடித்துள்ளோம்.  இது கோதுமை மற்றும் பட்டாணி கொண்டு தயாரிக்கப்படுகிறது. 

மொறு மொறு தோசைக்கு..

  • மிருதுவான தோசைகளை உருவாக்க தோசை கல்லை மிதமான தீயில் சூடாக்கவும். அது போதுமான அளவு சூடாக இருக்கும்போது, ​​சில துளிகள் எண்ணெய் சேர்த்து வெங்காயம் கொண்டு கல்லைத் தேய்க்கவும். 
  • தோசைக் கடாயின் மையத்தில், ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றவும்.பிறகு அதனை கல்லில் நன்கு வட்டமாகத் தேய்க்கவும்.
  • வட்டமான தோசையைச் சுற்றி சில துளிகள் எண்ணெயை ஊற்றவும், தோசையின் அடிப்பகுதி பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
  • அதை கவனமாக கல்லில் இருந்து எடுக்கவும் பிறகு அதனை இரண்டாக மடித்து தட்டில் வைக்கவும்
  • இதனை தேங்காய் சட்னி, சட்னி பொடி அல்லது சாம்பார் உடன் பரிமாறவும்.

உடனடி கோதுமை பட்டாணி தோசை எப்படி செய்வது? 

முதலில், பட்டாணியைத் தோலுரித்து நன்கு கழுவவும். பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கொத்தமல்லி இலைகளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கலவையை கிண்ணத்திற்கு மாற்றவும். அதனுடன் சிறிது கோதுமை, ரவை, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்க்கவும். மாவை நீர்க்க வைத்திருங்கள், அதற்கு ஏற்ற அளவு தண்ணீர் சேர்க்கவும். பிறகு வழக்கம் போல் தோசைக்கல் நன்கு காய்ந்தது மெல்லியதாக ஊற்றி வார்த்து எடுக்கவும். முறுவலான தோசை ரெடி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Supriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ  நெத்தியடி பதில்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Embed widget