எல்லா நாளும் உப்புமாவா..? இது ரொம்ப தப்புமா..! மனைவி பற்றி பளீச் பதில் அளித்த கால்பந்து வீரர் !
பிரபல கால்பந்து வீரரான டேவிட் பெக்காம், தனது மனைவி கடந்த 25 வருடங்களாக ஒரே உணவை மட்டும் சாப்பிட்டு வருவதாக ஆச்சர்யமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திரம் டேவிட் பெக்காம் கடந்த 1999 ம் ஆண்டு பாடகர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் விக்டோரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, புரூக்ளின்(22), ரோமியோ(19), குரூஸ்(16), மற்றும் ஹார்பர் செவன்(10) என்ற நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.
View this post on Instagram
இந்தநிலையில், டேவிட் பெக்காம் தனது மனைவி குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த தகவல் அனைவரிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நான் திருமணம் செய்த நாள் முதல் இன்று வரை (கிட்டத்தட்ட 23 ஆண்டுகள்) என் மனைவி விக்டோரியா ஒரே வகையான உணவை மட்டுமே உட்கொண்டு வருகிறார். வறுக்கப்பட்ட மீன் மற்றும் வேகவைத்த காய்கறிகளை மட்டுமே சிறிதும் முகம் சலிக்காமல் சாப்பிடுகிறார்.
View this post on Instagram
என் இளைய மகளான ஹார்பர் விக்டோரியாவின் வயிற்றுக்குள் கருவாக இருந்தபோது, என் தட்டில் இருந்ததை எடுத்து அதிசயமாக சாப்பிட்டாள். அந்த இரவு என் வாழ்நாளில் மறக்க முடியாத இரவு. அந்த உணவு என்ன என்பது எனக்கு சரியாக நினைவு இல்லை. ஆனால், அந்த உணவை அவர் அதற்கு முன்வு சாப்பிட்டதே இல்லை என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்