மேலும் அறிய

August Supermoon 2023: ”நிலா அது வானத்து மேலே...” - இன்று சூப்பர் மூன் பார்க்கலாமா? என்ன ஸ்பெஷல்?

August Supermoon 2023:  சூப்பர் மூன் என்றால் சந்திரன் முழு நிலவு நாளன்று முன்பை விட சற்று பெரியதாகவும், முன்பு பார்த்ததை விட சற்று பிரகாசமாகவும் தோன்றும்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர்மூன ( Supermoon) இன்று வானத்தில் தோன்ற இருக்கிறது. ஆகஸ்ட் 1-ம் தேதியான இன்று நிலவு பூமிக்கு மிக அருகில் வரும், இதன் காரணமாக வானத்தில் மிகப்பெரிய சூப்பர் மூன் தோன்றும்.

வானில் நிகழ்பவை நம்மை வியப்பில் ஆழ்த்தும். அவற்றில் சிலவற்றை நம்மால் கண்டு ரசிக்க முடியும். அப்படியான ஒன்றுதான் இன்று வானில் நிகழவிருக்கிறது.  பூமிக்கு மிக அருகில், சந்திரன் வர இருக்கிறது. முழு நிலவு ஓரிரு நாட்களுக்குத் தோன்றினாலும், முழுமையும் தெரிவது என்பது சில மணிநேரங்கள் மட்டுமே என்று கூறப்படுகிறது. இது இந்தாண்டில் இரண்டாவது சூப்பர் மூன் ஆகும்.

Sturgeon Moon

இன்று வானில் தோன்றும் சூப்பர் மூன் 'Sturgeon Moon’ என்றழைக்கப்படுகிறது, ஏனெனில், வட அமெரிக்காவில் உள்ள ஏரில் ஒன்றில் மிகப்பெரிய மீன் வகையான ’Sturgeon'  இந்த சமயத்தில் மிக அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

சூப்பர் மூன் என்றால் என்ன?

 சூப்பர் மூன் என்றால் சந்திரன் முழு நிலவு நாளன்று முன்பை விட சற்று பெரியதாகவும், முன்பு பார்த்ததை விட சற்று பிரகாசமாகவும் தோன்றும்.

இந்த நிகழ்வு பெரிஜி எனப்படும் அதன் சுற்றுப்பாதையில் சந்திரன் பூமிக்கு அருகில் வருவதால் ஏற்படுகிறது. சூப்பர் மூன் என்ற சொல் 1979 ஆம் ஆண்டில் வானியல் ஆய்வாளர் ரிச்சர்ட் நோல்லே என்பவரால் உருவாக்கப்பட்டத. மேலும் சந்திரன் 90 சதவிகிதம் பெரிஜிக்குள் இருக்கும்போது நிகழும் புதிய அல்லது முழு நிலவை சூப்பர் மூன் என விளிக்கப்படுகிறது.  இது பூமிக்கு மிக 357,530 கி.மீ. அருகில் உள்ளது.

இன்று காணப்படும் சூப்பர் மூன் இந்த ஆண்டின் மிகப்பெரியதாக இருக்கும், மேலும் இது பக் மூன் என்றும் அழைக்கப்படுகிறது. நேரம் மற்றும் தேதியின்படி, ஆண்டின் இந்த நேரத்தில் மான்களின் நெற்றியில் இருந்து வெளிப்படும் கொம்புகள் காரணமாக இந்த முழு நிலவுக்கு பக் நிலவு என்று பெயர் வழங்கப்பட்டது.

 தண்டர் மூன், ஹே மூன் மற்றும் வைர்ட் மூன் என உலக முழுவதும் இது பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேலும் பூர்வீக அமெரிக்கர்கள் இதை சால்மன் மூன், ராஸ்பெர்ரி மூன் மற்றும் அமைதியான நிலவு என்றும் அழைக்கிறார்கள்.

எப்போது பார்க்கலாம்?

இந்த நிகழ்வை 18:31 UTC ஆகஸ்ட்1-ம் தேதி அதோடு, ஆக்ஸ்ட் -2 ம் தேதி (12:01 am IST ), according to timeanddate.com -ல் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற நாட்களை விட 14% அளவில் பெரியதாகவும், 30% கூடுதல் பிரகாசமாகவும் நிலா காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே மாதம் 31-ம் தேதி நிகழ இருக்கும் சூப்பர் மூன் இந்தியாவில் பார்க்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://www.youtube.com/watch?v=eYfm62LjWZw - என்ற இணைப்பை க்ளிக் செய்து சூப்பர் மூன் நிகழ்வை காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

INDIA Vs BJP | பலத்தை காட்டுவாரா தாக்கரே?அடித்து ஆடும் I.ND.I.A! மகாராஷ்டிராவில் வெற்றி யாருக்கு?Priyanka Gandhi Wayanad : தெற்கில்  பிரியங்கா ராகுலின் மாஸ்டர் ப்ளான் கெத்து காட்டும் காங்கிரஸ்Woman Crying : Durai dhayanidhi : சீனுக்கு வந்த துரை தயாநிதி மனைவி! சர்ச்சைகளுக்கு ENDCARD..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ரெட் அலர்ட்  வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
சென்னைக்கு ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை மையம் சொன்ன முக்கிய அறிவிப்பு
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
திக் திக்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. தலைமை தேர்தல் ஆணையருக்கு என்னாச்சு?
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
சென்னையில் ஏன் மழை குறைந்தது? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே.? வானிலை மையத்தின் புது அப்டேட்.!
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
ஓடிடி சேவைகளுக்கு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
புயலாக மாற வாய்ப்பில்லை.. ரெட் அலர்ட் ஏன்? வானிலை மையம் தந்த விளக்கம்!
IND vs NZ 1st Test:இந்தியா - நியூசிலாந்து  ஆட்டம் ரத்து;‌ இரண்டாம் நாள் ஆட்டத்தில் மாற்றம்! என்ன?
IND vs NZ 1st Test:இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் ரத்து;‌ இரண்டாம் நாள் ஆட்டத்தில் மாற்றம்! என்ன?
அரசும் ஆளுநரும் புது காதலர்கள் போல உள்ளனர்- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
அரசும் ஆளுநரும் புது காதலர்கள் போல உள்ளனர்- அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Amaran Audio launch: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Embed widget