பொருளாதாரத்துக்கு இன்னொரு அடி; எண்ணெய் இறக்குமதி செய்யக் கூட வழியில்லை: இலங்கை பிரதமர்
இலங்கை பொருளாதாரத்துக்கு இன்னொரு அடி விழுந்துள்ளது. எண்ணெய் இறக்குமதி செய்யக்கூட வழியில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கை பொருளாதாரத்துக்கு இன்னொரு அடி விழுந்துள்ளது. எண்ணெய் இறக்குமதி செய்யக்கூட வழியில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை இப்போது இன்னும் மோசமான நெருக்கடியில் உள்ளது. எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சார, உணவுப் பற்றாக்குறையை தாண்டி இலங்கை பொருளாதாரம் முற்றிலுமாக சிதைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
மீட்க நினைத்தவரின் வாக்குமூலம்:
இலங்கை பிரதமரான ரணில் விக்கிரமசிங்கே தற்போது நாட்டின் நிதியமைச்சராகவும் இருக்கிறார். இலங்கையில் தொடரும் கடும் பொருளாதார நெருக்கடி நிலையை சமாளிக்கவும், அதிலிருந்து மீளவும் நிதியமைச்சரின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. அதன் தேவையை உணர்ந்து, நாட்டின் நிதியமைச்சராக ஒருவரை நியமிக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் யாரும் பதிவியை ஏற்க முன்வராததால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூடுதலாக நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றார்.
பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. ஆனால், இறக்குமதி செய்தாவது எண்ணெய்யை வாங்கக் கூட பணமில்லாத சூழலில் உள்ளதாக அந்நாட்டு பெட்ரோலியத் துறை கைவிரித்துள்ளது. இந்நிலையில், எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சார, உணவுப் பற்றாக்குறையை தாண்டி இலங்கை பொருளாதாரம் முற்றிலுமாக சிதைந்துவிட்டது என்று பிரதமரும், நிதியமைச்சருமான ரணில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போதைய கடன் 51 பில்லியன் டாலர் என்றளவில் உள்ளது. கோத்தபய அரசின் தவறான நிர்வாக நடவடிக்கையே இலங்கையின் மோசமான பொருளாதார சூழலுக்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ள அந்த நாட்டு பொதுமக்கள் அவரை பதவி விலக கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகினார்.
இந்திய உதவியும் பற்றவில்லை:
இந்தியாவின் கடனுதவி மூலம் அனுப்பப்படும் டீசல் ஜூன் 16-ந் தேதி சென்றடைந்தது. அடுத்த தவணை இன்று (ஜூன் 22-ந் தேதி) சென்றடைய வேண்டும். இலங்கை வந்தடையும். கடந்த வாரம் முன்னுரிமை அடிப்படையில் 2800- 3000 மெட்ரிக டன் மட்டுமே வழங்கினோம். வரும் வாரத்திற்கு தேவையான முழு டீசல் தற்போது வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் தினசரி பெட்ரோல் தேவை 3500 டன். இதில் நாள்தோறும் 3000 முதல் 3200 டன் மெட்ரிக் டன் பெட்ரோல் தினமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்த அரசாங்கம், நிலைமையை சரி செய்யும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டது என்று கூறியுள்ளார்.