Sri Lanka Crisis : இலங்கையில் திடீர் திருப்பம்... ஜுலை 13 ம் தேதி பதவி விலகும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே..!
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஜூலை 13ஆம் தேதி பதவி விலகுவது உறுதியாகிவிட்டது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கண்டித்து அந்த நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கை முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை முழுவதையும் சுற்றிவளைத்தனர். போராட்டக்காரர்களை பார்த்து பயந்துபோன இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு தப்பியோடினார்.
இந்தநிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஜூலை 13ஆம் தேதி பதவி விலகுவது உறுதியாகிவிட்டது. இதுகுறித்து இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவிக்கையில், இலங்கை அதிபர்கோத்தபய ராஜபக்சே ஷ ஜூலை 13ஆம் தேதி பதவி விலகுவதாக தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.
#BREAKING | இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக கோத்தபய ராஜபக்சே அறிவிப்புhttps://t.co/wupaoCQKa2 | #SriLanka #SriLankaCrisis #GotabayaRajapaksa #SriLankaProtests pic.twitter.com/NNgzwAvsgD
— ABP Nadu (@abpnadu) July 9, 2022
கட்சித் தலைவர்களின் கூட்டத்தைத் தொடர்ந்து அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு சபாநாயகர் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தான் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும், அனைத்துக் கட்சி ஆட்சியைப் பொறுப்பேற்க வழிவகை செய்வதாகவும் தெரிவித்தார்.
மார்ச் மாதத்திலிருந்து ராஜினாமா அழைப்புகளை எதிர்கொண்டிருந்த ராஜபக்சே, ஏப்ரல் தொடக்கத்தில் அவரது அலுவலக நுழைவாயிலை போராட்டகாரர்கள் நொறுக்கியதால், அதிபர் மாளிகையை தனது இல்லமாகவும் அலுவலகமாகவும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பயன்படுத்தி வந்தார்.
22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடான இலங்கை, முன்னெப்போதும் இல்லாத பொருளாதாரக் கொந்தளிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. கடந்த 70 ஆண்டுகள் இல்லாத மோசமான, அந்நியச் செலாவணியின் கடுமையான பற்றாக்குறையால் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியமான எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறுகிறது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உலக நாடுகளையே ஆட்டம் காண செய்துள்ளது. அங்கு பெட்ரோல், டீசல், உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்