மேலும் அறிய

South African Riot | தீப்பிடித்து எரிந்த கட்டிடம்.. குழந்தையை மாடியில் இருந்து வீசிய தாய்! என்ன நடந்தது?

திடீரென கட்டிடங்கள் பற்றி எரிந்ததால் அங்கு வசித்த பலரும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

தென் ஆப்பிரிக்காவில் பற்றி எரிந்த கட்டிடத்தில் இருந்து காப்பாத்துவதற்காக தன்னுடைய 2 வயது குழந்தையை தாய் ஒருவர் மாடியில் இருந்து  கீழே நின்றவர்களிடம்  வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக நாடுகள்  கொரோனாவால் கதிகலங்கி வரும் வேளையில் தென்னாப்பிரிக்காவில் கலவரம் கதிகலங்க வைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா ஊழல் வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரை கைது அடுத்து தென்னாப்பிரிக்கா கலவர பூமியாக மாறியது. ஜேக்கப்பின் கைதுக்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். பேரணிகள் நடத்தப்பட்டன. பேரணிகள் கலவரமாக மாறியது. பலர் வன்முறையில் ஈடுபட்டனர். மருத்துவமனை உள்ளிட்ட பல  கட்டிடங்களுக்கு தீவைக்கப்பட்டது. 

South African Riot | தீப்பிடித்து எரிந்த கட்டிடம்.. குழந்தையை மாடியில் இருந்து வீசிய தாய்! என்ன நடந்தது?

இந்தக்கலவரத்தில் இதுவரை 72-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. திடீரென கட்டிடங்கள் பற்றி எரிந்ததால் அங்கு வசித்த பலரும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்நிலையில் பற்றி எரிந்த கட்டிடத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக தன்னுடைய 2 வயது குழந்தையை தாய் ஒருவர் மாடியில் இருந்து கீழே நின்றவர்களிடம் வீசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தீப்பற்றும் போது 16-வது மாடியில் இருந்த 26 வயது தாயும், 2 வயது மகளும் படிக்கட்டு வழியாக தப்பித்து ஓடி வந்துள்ளனர். கிட்டத்தட்ட முதல் மாடி வரை வந்தவர் அதற்கு மேல் படிக்கட்டு வழியாக வர முடியாத காரணத்தால் மேலே இருந்து கீழே நின்றவரிடம் குழந்தையை வீசியுள்ளார். கீழே நின்றவர்கள் லாவகமாக குழந்தையை பிடித்து காப்பாற்றியுள்ளனர்.

தலைவன் சோனு சூட்டையே அடிச்சிட்டியா? தொலைக்காட்சியை கல்லால் அடித்து நொறுக்கிய சிறுவன்...!

இது குறித்து தெரிவித்த அந்த தாய், நான் ஒரு வித பயத்துடனேயே குழந்தையை கீழே வீசினேன். நான் அதிர்ச்சியில் இருந்தேன். ஆனால் கீழே நின்றவர்கள் குழந்தையை பிடித்துவிட்டார்கள்.  அந்த நேரத்தில் எனக்கு தோன்றியது எல்லாம் ஒன்றுதான், என் மகளை பத்திரமாக வெளியே அனுப்ப வேண்டும். அவளை தனியாக விட்டுவிட்டு என்னால் தப்பிக்க முடியாது. நான் கீழே சென்று பார்த்தபோது அங்கு நின்றவர்களின் தோளில் என் மகள் அமர்ந்திருந்தாள். என்னைக்கண்டதும், அம்மா என்னை தூக்கி வீசி விட்டீர்கள் என பயத்துடன் கேட்டாள். அவள் பயந்துபோய் இருந்தாள் என்றார்.

South African Riot | தீப்பிடித்து எரிந்த கட்டிடம்.. குழந்தையை மாடியில் இருந்து வீசிய தாய்! என்ன நடந்தது?

நாடு முழுவதும் ஏற்பட்ட பல தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலரும் சிகிச்சைபெற்று வருகின்றனர். பலரது உடைமைகள் எரிந்து நாசமாகியுள்ளது. இந்த வன்முறை குறித்து தென்னாப்பிரிக்காவின் தற்போதைய அதிபர் சிரில் ராமஃபோஸா, 1990 வருடங்களுக்கு பின்பு நாட்டில் நடக்கும் மிக பயங்கரமான கலவரம் இதுதான் என்றார். 

NASA Prediction | 2030-ஆம் ஆண்டில் பெரிய பெரிய அலைகள்.. மாதக்கணக்கில் வெள்ளம் - நாசாவின் அதிர்ச்சி ஆய்வு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
Crime: தம்பியை கடப்பாறையால் குத்தி கொலை செய்த அண்ணனும் அண்ணியும் கைது! ஏன் எதற்கு?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Embed widget