வாழ்வின் விளிம்பில் இருந்த திருச்சி பெண்: கடைசி ஆசையை நிறைவேற்றிய சிங்கப்பூர் மருத்துவமனை!
உயிரிழக்கும் தருவாயில் இருந்த புற்றுநோயாளி பெண்ணின் கடைசி ஆசையை சிங்கப்பூர் மருத்துவர்கள் குழு, நிறைவேற்றியுள்ளது.
தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் அவரது கணவர் ராஜகோபாலுடன் தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த சிங்கப்பூரில் வசித்து வந்தார். ராஜேஸ்வரிக்கு சில மாதங்கள் முன்பு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டது. சிங்கப்பூர் மறுத்துவமானயில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வந்தது. நோய் முற்றி கடைசி கட்டத்தை அடைந்ததை அடுத்து, அவரது கடைசி கால ஆசைகளை கேட்டு நிறைவேற்ற சொல்லி அவரது கணவரிடம் மருத்துவர்கள் கூறிய பட்சத்தில் அவருக்கு தன் இரு மகன்களை காண வேண்டும் என்று கூறினார். நெகிழ்ந்து போன மருத்துவமனை நிர்வாகம் அதனை செய்ய முடிவெடுத்தது.
அவரது 9 மற்றும் 12 வயது மகன்கள் இருவரும் திருச்சியில் உள்ள உறவினர்களிடம் இருந்து வளர்ந்து வருகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்தியாவுக்கு சில விமானங்களே இயக்கப்பட்டு வந்த நிலையில், கடுமையான லாக்டவுண் நடவடிக்கைகளும் நடைமுறையில் இருந்தன. ராஜேஸ்வரி சிகிச்சை பெற்று வந்த டன் டாக் செங் மருத்துவமனை, மிகவும் முயற்சி செய்து வெளியுறவு துறை அமைச்சகங்களிடம் பேசி, அவரை இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது. எனினும் விமானம் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்தான், அவருக்கு இந்தியா செல்வதற்கான அனுமதி கிடைத்தது.
இது குறித்து, ராஜேஸ்வரியின் கணவர் ராஜகோபாலன் கூறியதாவது: "கடைசி நேரத்தில் அனுமதி கிடைத்ததால் விமானத்தில் எங்களுக்கு இடமில்லாமல் இருந்தது. சக பயணியர் ஒருவர் அவரது டிக்கெட்டை எங்களுக்காக ஒதுக்கி தந்ததால், எங்களுக்கு இடம் கிடைத்தது. இந்தியா வந்து மகன்களை பார்த்த சந்தோஷத்தில் இரு வாரங்கள் மகிழ்ச்சியாக இருந்தார். இரு வாரங்கள் கழித்து என் மனைவி இறந்து விட்டார். சிங்கப்பூரில் அனுமதிக்கு காதிருந்தபோதே மகன்களை நேரில் பார்க்காமல் என் உயிர் போகாது என அவர் கூறினார். அதனை இந்தியா வந்து நிறைவேற்றியும் விட்டார். அதற்கு உதவிய டன் டாக் செங் மருத்துவமனைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்." இவ்வாறு அவர் கூறினார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் முக்கியச் செய்திகளுக்கு...
#tnlocalbodyelection #LIVE
— ABP Nadu (@abpnadu) October 12, 2021
மதுராந்தகத்தில் அதிர்ச்சி... வாக்கு எண்ணிக்கை மையத்தில் வரிசையாக உறங்கும் அதிகாரிகள்!https://t.co/7bO3ukiFJK#LocalBodyElection #TamilNadu #Update@TNelectionsCEO
#tnlocalbodyelection #LIVE விழுப்புரத்தில் அதிர்ச்சி... மொத்தம் 341 ஓட்டுகள்... செல்லாதது 301 ஓட்டுகள்... தபால் ஓட்டு எண்ணிக்கையில் பகீர்!https://t.co/4w7emXMGLe#LocalBodyElection #TamilNadu #Update@TNelectionsCEO
— ABP Nadu (@abpnadu) October 12, 2021