Shinzo Abe: சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் ஜப்பான் பிரதமர்.. யார் இந்த ஷின்சோ அபே?
Shinzo Abe:
ஷின்சோ அபே (Shinzo Abe):
ஷின்சோ அபே; ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர்; இவர் ஜப்பான் நாட்டின் அதிக காலம் பதவி வகித்த பிரதமர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். ஷின்சோ பொருளாதார வளமிக்க குடும்பத்தில் பிறந்தவர். ஷின்சோ அபேயின் இன்றைய தெளிவான அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்தது அவருடைய குடும்பம் என்று சொன்னால் மிகையாகாது. ஆம். ஷின்சோவின் குடும்ப உறுப்பினர்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டவர்கள். ஷின்சேவின் தாத்தா இரண்டாம் உலகப் போரில் முக்கிய பங்கு வகித்தவர். இவரின் தாத்தாவும் தந்தையும் அரசின் உயர்பதவிகளை வகித்துள்ளனர். தன் இளம்காலம் முதலே அரசியலில் ஆர்வம் கொண்ட ஷின்சோ, தன்னுடைய தனித்துவமிக்க துணிச்சல் மிக்க முடிவுகளால் வரலாற்றில் இடம்பெற்றவர். இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் பிறந்து ஜப்பான் நாட்டு பிரதமரானாவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஷின்சோ அபே, தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு உள்ளானர். உலக தலைவர்கள், ஜப்பான் நாட்டு மக்கள் என் அனைவரும் தலைசிறந்த பிரதமர் என்று இவரைப் போற்றி வருகின்றனர். இந்த அளவிற்கு புகழாரத்திற்கு உரிய ஷின்சோ அபே யார் என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
அரசியில்வாதியான ஷிண்டாரோ அபே (Shintaro Abe) மற்றும் யோகோ கிஷி (Yoko Kishi) இணையருக்கு 1954 ஆம் ஆண்டு, டோக்கியோவில் பிறந்தார் ஷின்சோ அபே. இவரின் இளமைக்காலம் முழுவதும் Yamaguchi ,மாகாணத்தில் வசித்தார். அந்நாட்டில் உள்ள Seikei பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார். அங்கு University of Southern California - வில் பப்ளிக் பாலிசி தொடர்பாக படித்தார். அங்கேயே ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பின்னர், சொந்தநாட்டிற்கு திரும்பிய ஷின்சோவிற்கு ஜப்பான் வெளியுறவு அமைச்சகத்தில் உயர் அதிகாரியின் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது; லிபரல் டெமாக்ரெடிக் கட்சியின் (liberal democratic party) தலைவருக்கு உதவியாளராகவும் இருந்தார்.
ஷின்சோவின் அரசியல் பயணம்:
1982 ஆம் ஆண்டில், ஷின்சோவின் தந்தை ஜப்பான் நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் தலைவராகவும், ஷின்சோ உதவி செயலாளராகவும் நியமிக்கபட்டார். ஜப்பான் நாட்டில் முக்கிய அரசியல் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் (liberal democratic party) உயர் பதவியைப் பெற்றார்.
1993 ஆண்டில், ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் உறுப்பினராக அபே தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 ஆம் ஆண்டில் லிபரல் டெமாக்ரெடிக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய திறமையால் ஜப்பான நாட்டின் மிக இளம் வயதில் பிரதமரானார். 2006-2007/ 2014-2017/ 2017- 2020/ 2021 ஆகிய காலக்கட்டத்தில் ஜப்பானின் பிரதமராக இருந்தார். அமைச்சரவை தலைமை செயலாளராகவும் பல ஆண்டுகள் பதிவி வகித்திருக்கிறார்.
இவருடைய ஆட்சி காலத்தில் ஜப்பான் நாட்டில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். நாட்டில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தனியாக ஒரு வரி கொள்கை நிபுணரை நியமித்தார். பொருளாதார கொள்கைகளில் பல புதிய மாற்றங்களை செய்தார். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த அதிக நிதி ஒதுக்கீடு செய்தார். தனியார் நிறுவனங்களை ஊக்குவித்தல், அரசியல் மற்றும் வேலைவாய்ப்பில் மகளிரின் பங்களிப்பை அதிகர்ப்பது உள்ளிட்ட பலவற்றிற்கு திட்டங்களை அறிமுகம் செய்தார். ஜப்பான் நாட்டு இராணுவத்தை பலம் வாய்ந்ததாக மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டவர்.
இந்தியா- ஜப்பான் இடையே நல்லுறவு நீடிப்பதை முக்கியமானதான கருதினார். நரேந்திர மோடி தனது அன்பு நண்பர் என ஷின்சோவை பல நேரங்களில் குறிப்பிட்டுள்ளார்.
ஷிண்டோவுக்கு ஐஸ் கிரீம் என்ரால் அவ்வளவு பிடிக்கும். தர்பூசணி, ரமென் கொரியன் பார்பிக்யூ உள்ளிட்டவை இவருடை பேவரைட் உணவு.
இவருடைய டயட்டில் அரிசி, மிசோ சூப்(miso soup) உள்ளிட்டவைகள் நிச்சயம் இடம்பெறும். கோல்ஃப், வில்வித்தை போன்ற விளையாட்டுகள் விளையாடுவார்.
இவர் வெகு நாட்களாக பெருங்குடல் அழற்சி (ulcerative colitis)-யால் அவதிப்பட்டு வந்தார். இதனால், கடந்த ஆகஸ்ட் 2020-ல் உடல்நிலை மோசமடைந்ததால், தனது பதவியை ராஜினாமா செய்தார்.
"என் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனக்கு மக்கள் கொடுத்த பணியை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அதற்கு என் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. ஆகையால் நான் பிரதமராக இருக்க விரும்பவில்லை என்று கூறி ராஜினாமா" செய்தார்.
இன்று ஷின்சோ அபே மீது நடத்தப்பட துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு உலக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.