விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவிய வைரஸ்: ஷமோண்டா பாதிப்பால் ஒருவர் பலி?
விலங்குகளிடம் மட்டுமே கண்டறியப்பட்ட ஷமோண்டா வைரஸ் மனிதரிடம் முதன்முறையாக கண்டறியப்பட்டதால் அதிர்ச்சி

உயிரைப்பறிக்கும் ஷமோண்டா வைரஸ்?
பிரான்ஸில் இதுவரை விலங்குகளிடம் மட்டுமே கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் ஷமோண்டா வைரஸ் மனிதரிடம் முதன்முறையாகப் பதிவாகியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.பிரான்ஸில் உயிரிழந்த ஒரு நோயாளிக்கு ஷமோண்டா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரான்சின் லியோன் நகரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு, ஏற்கெனவே நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருந்ததாகவும் அவருக்கு ஷமோண்டா வைரஸ் தொற்று ஏற்பட்டு பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியது எப்படி?
விலங்குகளில் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டதாக அறியப்பட்ட இந்த வைரஸ், மனிதரிடம் பதிவாகியிருப்பது மருத்துவத் துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நோயாளியின் உயிரிழப்புக்குக் வைரஸ் தொற்றுதான் காரணமா அல்லது ஏற்கெனவே இருந்த தீவிர உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்ததா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.இந்த வைரஸ் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து நாடுகளின் விலங்குகளில் முதன்முறையாக கண்டறியப்பட்ட நிலையில் தற்போது பூச்சுக்கடியின் விளைவாக இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மும்முரமாக நடைபெறும் ஆய்வு
இந்த வைரஸ் குறித்த ஆய்வின் முடிவுகள் முழுமையாக வெளிவந்த பின்னரே ஷமோண்டா வைரஸ் தாக்கத்தின் விளைவுகள் என்ன என்பதும், இது உயிரை பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















