Saudi Arabia Accident: சோகம்..! சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து - மெக்காவிற்கு சென்ற 20 யாத்ரீகர்கள் உயிரிழப்பு..!
Saudi Arabia Bus Accident: சவுதி அரேபியாவில் பேருந்து தீ பற்றி வெடித்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் புனித ஹஜ் பயணித்திற்கு சென்ற பேருந்து தீ பற்றி வெடித்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா, மதீனாவிற்கு ஹஜ் பயணம் மேற்கொண்ட பயணிகளின் பேருந்து பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, கனரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 29-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகமான Al-Ekhbariya தெரிவித்துள்ளது.
இதுகுறித்து Al-Ekhbariya ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”சவுதி அரேபியாவின் அகபா ஷார் பகுதியில் இருந்து புனித தலமான மெக்கா, மதீனா ஆகிய இடங்குகளுக்கு சென்ற யாத்ரீகர்கள் பேருந்து விபத்துக்குள்ளானது. அசிர் (Asir) அருகே யெமென்( Yemen) எல்லைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து தீப்பிடித்து ஏறிந்தது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 29 -க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இன்னும் முழு விவரம் தெரியவரவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
மெக்கா, மதீனா ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள சாலைகள் சற்று ஆபத்தானவை என்று கூறப்படுகின்றன. குறிப்பாக ஹஜ் பயணத்தின்போது, சாலைகளில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரமலான் கொண்டாட்டம்:
இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான்(Ramadan Month) வருகின்ற மார்ச் 23 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், இந்த மாதத்தில் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து இறைவனை தொழுது உணவு உண்டு நோன்பை தொடங்குவார்கள்.
பிறகு சூரிய அஸ்தமனத்திற்கு பின், நோம்பை முடிப்பார்கள். நோன்பு திறப்பதை இப்தார் என்று அழைப்பர். நோன்பு இருக்கும் முப்பது நாட்களும் தினசரி ஐந்து முறை தொழுகை செய்வது கட்டாயமாகும். ரமலான் மாதத்தை இறைவனின் அருள் பெரும் மாதம் என்கிறார்கள் இஸ்லாமிய மத குருமார்கள். ரம்ஜான் மற்றும் ரமலான் என்றப் பெயர்களால் இந்த பண்டிகை அழைக்கப்படுகிறது.
நோன்பின் தூய்மை:
நோம்பு இருப்பவர்கள் உடல் அளவில் மட்டும் அல்லாமல் மனதளவில் தயார் ஆக வேண்டும். இந்த புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோம்பு இருப்பது மட்டும் அல்லாமல் உலக இச்சைகளைத் தவிர்க்க வேண்டும். நோன்பு இருப்பதுடன் நமது கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்காமல் தினசரி திருக்குர்அன் வாசித்தல் முடிந்தவரை இந்த காலத்தில் ஏழை எளியோருக்குக் கொடுத்தல் என்பது இறைவனுக்குக் கொடுப்பதாக கூறப்படுகிறது.
நோன்பின்போது சுய ஒழுக்கத்துடன் இருப்பதும் முக்கிய ஒன்று. ஒரு மாதம் ஓய்வு பெறுவதன் மூலம் பலவிதமான நோய்களில் இருந்து மனிதன் காக்கப்படுகின்றான். நோன்பு இருக்கும் காலத்தில் நமது உடல் சுத்தமாகிறது. வருடம் முழுவதும் உடலிலும் மனதிலும் உள்ள தீய பழக்கங்கள், தீய எண்ணங்கள் நம்மிடம் இருந்து விடுபட்டு இந்த ரமலான் மாதத்தில் நாம் புத்துணர்வு அடைகிறது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.
இந்தியாவில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மதத்தினரும் இணைந்தே பல இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.