காத்மாண்டில் பானிபூரி விற்பனைக்கு தடை: காரணம் என்ன?
நேபாளம் தலைநகர் காத்மாண்டில் பானிபூரி விறபனைக்கு அந்நாட்டின் சுகாதரா அமைச்சகம் தடை வித்துள்ளது.
நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டில் காலரா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டில் உள்ள லலித்பூர் நகரில் ( Lalitpur Metropolitan City) 12 பேருக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து காலரா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருதால் பானி பூரி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பானிபூரிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா தொற்றை பரப்பும் பாக்டீரியா இருபதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லலித்பூர் பகுதியின் காவல்துறை உயர் அதிகாரி சீதாராம் ஹச்செது (Sitaram Hachethu) கூறுகையில் நகரின் கூட்டம் கூடும் இடங்கள், பானி பூரி விற்கப்படும் இடங்களை கண்டறிந்து அங்கிருக்கும் கடைகளை மூடும்ப்படும் அறிவுறுத்தப்பட்டுவருதாகவும், காலரா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
View this post on Instagram
காலரா வைரஸ் தொற்றுக்கு நேற்று மட்டும் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை காலரா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்திரகிரி பகுதியிலும் சிலருக்கு காலரா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிகக்ப்பட்டுள்ளது.
காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் டெகு நகரில் உள்ள சுக்ரராஜ் மருத்துவமனையில் ( Sukraraj Tropical and Infectious Diseases Hospital) சிகிச்சை பெற்றுவருவதாகவும், இருவர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்