மேலும் அறிய

Sunshine Diet: ”சன் ஷைன்” டயட் - பச்சிளங் குழந்தையை பட்டினி போட்டு கொன்ற சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்

Sunshine Diet: ”சன் ஷைன்” உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் பெற்ற பச்சிளங் குழந்தையை, பட்டினி போட்டு கொன்ற சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Sunshine Diet: பச்சிளங் குழந்தையை பட்டினி போட்டு கொன்ற சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சருக்கு, 8 ஆண்டுகள் சிறை தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது.

பச்சிளங் குழந்தையை கொன்ற தந்தை: 

ரஷ்யாவைச் சேர்ந்த 44 வயதான  சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் மாக்சிம் லியூட்டி. ஊட்டச்சத்து உணவு மறுக்கப்பட்டதால், லியூட்டியின் மகன் "நிமோனியா மற்றும் மெலிவினால்" கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் தேதி இறந்தார்.  இதுதொடர்பான விசாரணையில் சோச்சி நகரைச் சேர்ந்த லியூட்டி, சூரிய ஒளியை மட்டுமே தனது மகனுக்கு முக்கிய உணவாக வழங்க முடிவு செய்தது கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்தது கண்டறியப்பட்டது. அதாவது தனது மகனுக்கு நீண்ட காலத்திற்கு உணவு மற்றும் தண்ணீர் எதுவும் வழங்காமல்,  சூரிய ஆற்றலையே உணவாக எடுத்துக் கொள்ளும் சன் ஷைன் எனும் உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றியது உறுதியானது. அதோடு, லியூட்டி தனது மனைவியான ஒக்ஸானா மிரோனோ,  குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையும் தடுத்து நிறுத்தியுள்ளார். இதையடுத்து, லியூடிக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு 860 பவுண்டுகள் அபராதமும் விதிக்கப்பட்டது.

குழந்தையின் உடல்நலம் பாதிப்பு:

உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, “மகனை கடினப்படுத்துவதற்காக அவனை ஒரு நாளைக்கு ஒரு முறை லியூட்டி குளிர்ந்த நீரில் குளிப்பாட்டியுள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் குழந்தையை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல மறுத்துள்ளார். உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு  இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது.  கணவர் சொன்ன உணவுக் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மனைவி பின்பற்ற, மூன்றரை பவுண்ட் எடையில் பிறந்த குழந்தையின் உடல் நலனை மேலும் பாதித்துள்ளது. விசாரணையின் போது,  ”தாயின் விருப்பப்படியே தான் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றியதாகவும், குறைமாதம் மற்றும் குறைந்த எடையில் குழந்தை பிறந்தது தெரிந்து இருந்தால், நான் அப்போதே மருத்துவரை அணுகி இருப்பேன்” என லியூட்டி தெரிவித்துள்ளார். ஆனால் அது அனைத்தும் பொய் என விசாரணையில் உறுதியாகியுள்ளது.  

காதலிக்கு 2 ஆண்டுகள் சிறை:

இதுதொடர்பாக, மிரனோவாவின் தாயார் கலினா பேசுகையில்,  லியூட்டி ஒரு மோசமான நிலையில் இருப்பதாக குற்றம் சாட்டினார்.  என் மகள் அவருடன் இருப்பதை நான் எதிர்த்தேன். நான் எல்லாவற்றையும் பார்த்தேன். லியூட்டி பைத்தியம் என்று அவளிடம் சொன்னேன், ஆனால் அவள் என் பேச்சைக் கேட்கவில்லை. அவள் ஒரு பன்றியைப் போல அங்கே வாழ்ந்தாள்.

மின்ரோவாவின் உறவினர்கள், அவர் பலமுறை கணவரை விட்டு வெளியேற விரும்பியதாகவும், குழந்தைக்கு உணவளிக்க வேண்டாம் என்று அவர் கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். மிரனோவா ரகசியமாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயன்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். மிரோனோவா தனது தாய்மையின் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியதற்காகவும், ஒரு குழந்தைக்கு உதவி வழங்கத் தவறியதற்காகவும் அவளுக்கு இரண்டு வருட கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget