Ceasefire Russia Ukraine: உக்ரைனில் 4 நகரங்களில் போர் நிறுத்தம் : தடைப்போட்ட புடின்
உக்ரைனில் 4 நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷ்ய அதிபர் புடின் தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12வது நாளாக நீடித்து வரும்நிலையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் வேண்டுகோளை ஏற்றது ரஷ்யா, அதன் அடிப்படையில், குடிமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில், கீவ், கார்கோவ், மரிபோல் மற்றும் சுமி நகரங்களில் போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் வேண்டுகோளின் பேரில் மனிதாபிமான வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ரஷ்ய இராணுவம் உக்ரைனில் இந்திய நேரப்படி மதியம் 12 மணி முதல் போர்நிறுத்தத்தை அறிவித்தது.
Russian military declares ceasefire in Ukraine from 0700 GMT to open humanitarian corridors at French President Emmanuel Macron's request: Sputnik
— ANI (@ANI) March 7, 2022
முன்னதாக, இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ரஷ்யா உக்ரைன் மீதான போரை மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. பொதுமக்கள் உள்ள பகுதிகளில் மீட்புப்பணிக்காக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக தகவல் தெரிவித்தது. பிரான்ஸ் அதிபர் கோரிக்கைக்கு முன்பாக மாணவர்களை மீட்கும் பணிக்காக போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
#JUSTIN | உக்ரைனின் 4 நகரங்களில் போர் நிறுத்தம்https://t.co/wupaoCQKa2 | #Ukraine️ #UkraineRussianWar #Russian pic.twitter.com/0wPdfgcGMS
— ABP Nadu (@abpnadu) March 7, 2022
முன்னதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிட் செலென்ஸ்கி ரஷ்ய ராணுவத்தினர் ஆயுதங்களைக் கைவிட்டு, நாடு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து இரு நாட்டுத் தரப்புகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட விரும்புவோரும், ராணுவப் பயிற்சி பெற்ற சிறைவாசிகளும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவர் என்றும் அறிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்