ரஷ்யர்களை உக்ரைனில் குடியேற்ற புதின் உத்தரவு; விமான டிக்கெட் விற்பனை நிறுத்தம்!
அனைத்து விமானங்களிலும் வரும் சனிக்கிழமை வரை டிக்கெட்கள் முழுவதும் விற்பனையாகிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய மக்களை குடியேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டதையடுத்து விமான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டதாக அந்நாட்டின் விமான சேவை நிறுவனமான அவியாசேல்ஸ் (Aviasales) வலைதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று, உக்ரைன் நாட்டில் ரஷ்ய மக்களை குடியேற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தவிட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக ரஷ்ய மக்கள் உக்ரைனில் குடியேற உள்ளனர். இந்நிலையில், அர்மேனியா, ஜார்ஜியா, அஜர்பைசான், கஸ்கஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விமான சேவை மையங்களில் விமான டிக்கெட்கள் புதன்கிழமையன்று விற்பனையாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு பிரபல விமான போக்குவரத்து சேவை நிறுவனமான டர்கிஷ் ஏர்லைன்ஸ் (Turkish Airlines) தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள தகவலில் ரஷ்யாவிற்கு வருவதற்கும், அங்கிருந்து மற்ற வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் பிரதான விமான நிலையமான இஸ்தான்புல் விமான நிலையத்தில் புறப்படும் அனைத்து விமானங்களிலும் வரும் சனிக்கிழமை வரை டிக்கெட்கள் முழுவதும் விற்பனையாகிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
#BREAKING: Social media accounts in Russia: Russian Railways and airlines are refusing to sell tickets to men 18-65 years of age
— Amichai Stein (@AmichaiStein1) September 21, 2022
ரஷ்யாவில் உள்ள சில விமான சேவை நிறுவனங்கள் விமான டிக்கெட் விற்பனையை நிறுத்திவிட்டதாகவும், 18 முதல் 65 வயது வரை உள்ள நபர்களுக்கு டிக்கெட் வழங்கப்படுவதில்லை என்றும் அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் மற்றும் இதழியலாளர்கள் பலர் தங்கள் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளனர். சட்ட ரீதியிலான பிரச்சினை ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதால், விமான டிக்கெட்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளிக்கும் இளம் வயதினர் மட்டுமே நாட்டை விட்டுச் செல்ல முடியும் என்று Fortune என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லுஹான்ஸ் (Luhansk) டோனெஸ்( Donetsk) ஆகிய மாகாணங்களில் உக்ரைனின் எந்தெந்த பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது குறித்து வாக்கெடுப்பு இந்த வார இறுதியில் நடத்தப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதின் தொலைக்காட்சி மூலம் அறிவித்ததற்கு பிறகு, பாதுகாப்பு அமைச்சர் செர்கே சோய்கு (Sergey Shoigu) 3 லட்சம் வீரர்களை போருக்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நிலப்பரப்பை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்தை ஆதரித்து பேசிய அவர், ரஷ்யாவை பாதுகாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த தயாராக இருப்பதாகவும் தான் பொய் சொல்லவில்லை என்றும் மேற்குலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததை தொடர்ந்து, இப்போர் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, அணு ஆயுத பயன்பாடு குறித்து புதின் வெளிப்படையாக பேசியுள்ள நிலையில், ஹங்கேரி அளவில் உக்ரேனிலிருந்து ஒரு பகுதியை இணைக்கும் திட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்தார். மேலும், 300,000 ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Putin: Russia has more modern nukes than the West. Will use all weapons if Russian territory is threatened. "We are not bluffing."
— Mark MacKinnon (@markmackinnon) September 21, 2022
ரஷ்யா மக்களிடம் தொலைக்காட்சியில் உரையாற்றியுள்ள புதின், "நமது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தப்பட்டால், ரஷ்யாவையும் நம் மக்களையும் பாதுகாக்க அனைத்து வழிகளையும் பயன்படுத்துவோம் என்பதில் சந்தேகமில்லை. நான் பொய் சொல்லவில்லை" என்றார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.