Princess Diana : ஏலம் விடப்பட்ட இளவரசி டயானாவின் தனித்துவமான ஃபோர்ட் கார்.. சில தகவல்கள்..
இளவரசி வாகனத்தை ஓட்டுவது "மிகவும் துணிச்சலான தேர்வாகும்" என கிளாசிக் கார் நிபுணர் அர்வெல் ரிச்சர்ட்ஸ் இந்த வார தொடக்கத்தில் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று பிரிட்டனின் சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் நடைபெற்ற ஏலத்தில், மறைந்த இளவரசி டயானா இயக்கிய ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ சீரிஸ் 1 724,500 பவுண்டுகள் (அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் $851,070) மதிப்பில் ஏலம் போனது.
டயானா ஓட்டிய கார் ஏலம் :
இங்கிலாந்து நாட்டின் இளவரசியாக பிறந்தவர் டயானா. இவரது பிறப்பு , சார்லஸ் உடனான திருமணம் , விவாகரத்து , இறப்பு என அனைத்துமே உலக நாடுகளால் உற்றுநோக்கப்பட்டவை . லைம் லைட்டில் இருந்த டயனா 1985 முதல் 1988 ஆம் ஆண்டு வரை ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ சீரிஸ் காரை பயன்படுத்தி வந்தார். அந்த கார் தற்போது ஏலமிடப்பட்டது. இளவரசி அடிக்கடி செல்சியா மற்றும் கென்சிங்டனை ஃபோர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போவில் சுற்றியிருக்கிறார். அதன் பிறகு அது மீண்டும் ஃபோர்டிடமே ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஃபோர்ட் நிறுவனத்திடம் கொடுப்பதற்கு முன்னால் அது பல உரிமையாளர்களை கொண்டிருந்தது என்கிறது பிரபல சில்வர்ஸ்டோன் பத்திரிக்கை. சில்வர்ஸ்டோனால் தற்போது நடத்தப்பட்ட ஏலத்தில் கார் 1 724,500 பவுண்டுகளுக்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆனால் காரை வாங்கிய உரிமையாளர் குறித்த விவரங்கள் வெளியகவில்லை.
டயானாவிற்காக அடிக்கப்பட்ட கருப்பு நிறம் :
டயனா ஓட்டிவந்த ஆர்எஸ் டர்போ சீரிஸ் 1 வெள்ளை நிறத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டது, ஆனால் அரச குடும்ப காவல் அதிகாரி டயானாவின் விருப்பத்திற்காக அதில் கருப்பு வண்ணம் பூசுமாறு கேட்டுக்கொண்டதாக ஏலம் விட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த கார் 24,961 மைல்கள் ஓடியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசி வாகனத்தை ஓட்டுவது "மிகவும் துணிச்சலான தேர்வாகும்" என கிளாசிக் கார் நிபுணர் அர்வெல் ரிச்சர்ட்ஸ் இந்த வார தொடக்கத்தில் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
Our car auction is well underway!
— Silverstone Auctions (@silverstoneauc) August 27, 2022
Lot 491, the Diana Escort RS Turbo is heading across the block in an hour or so.
We have livestream on our website and YouTube and we will also be going live on Instagram. Make sure you tune in! #silverstoneauctions #silverstoneclassic pic.twitter.com/4XvlN4QvB3
அடுத்த வாரம் டயானா இறந்து 25 ஆண்டுகள் ஆகிறது, 36 வயதில் சொகுசு காரில் பயணம் செய்தவர் . அதிக வேகமாக சென்றதால் அங்குள்ள சுரங்கப்பாதையில் மோதி விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிலர் அது அரச குடும்பமே திட்டமிட்டு நடத்திய கொலை என்கிறனர்.