மேலும் அறிய

Pope On Christmas : கிறிஸ்துமஸுக்கு இதைச் செய்யாதீர்கள்.. போப் பிரான்சிஸ் பொதுமக்களுக்கு வேண்டுகோள்..

வரும் கிறிஸ்துமஸிற்கு பொதுமக்கள் யாரும் குறிப்பிட்ட விஷயத்தை செய்ய வேண்டாம் என, போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா போர்:

கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் இதுவரை நிறைவடையவில்லை. ரஷ்யாவின் வலிமையால் சில நாட்களில் இந்த போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டி வருவதால், இருநாடுகளுக்கு இடையேயான போர் 10 மாதங்களை எட்டியுள்ளது. அண்மையில், இந்த போர் குறித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் உடனான போர் ஒரு நீண்டகால போராக இருக்கும் என தெரிவித்து இருந்தார். ஆயிரக்கணக்கான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த போரில் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். அதோடு, சர்வதேச அளவில் பொருளாதார தாக்கத்தையும் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் ஏற்படுத்தியுள்ளது.

போப் பிரான்சிஸ் வேண்டுகோள்:

சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த போரை,  உடனே நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் வாட்டிகன் சிட்டியில் தனது வாராந்திர பொது பார்வையாளர்களின் முடிவில் பேசிய போப் பிரான்சிஸ், நடப்பாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மிகவும் எளிமையானதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

”எளிமையாக கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள்”

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் கடும் குளிரிலும், பசியாலும் வாடி வருகிறார்கள். அவர்கள் இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும். அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுகளை குறைத்துக்கொண்டு, அதனால் மிச்சமாகும் பணத்தை உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பசி மற்றும் குளிரில் உள்ளனர். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறை காரணமாக,  உக்ரைனில் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்வதை நாம் உறுதிமொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என, போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார்.

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு:

அண்மையில்  இத்தாலி தலைநகர் ரோம் சென்ற போப் ஆண்டவர் பிரான்சிஸ்,  அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில்  உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.  தொடர்ந்து  அந்நாட்டு மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களை குறிப்பிட்டு பேசும்போது திடீரென துயரம் தாளாமல் அமைதி ஆகி விட்டார். சில நொடிகளில் கண்ணீர் விட்டு அழுதார்.  முன்னதாக, உக்ரைனுக்கு பிற நாடுகள் ஆயுதங்களை வழங்குவது தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கது என்றும்,  ஆக்கிரமிப்புக்கு எதிராக தற்காப்பு என்பது "சட்டபூர்வமானது மட்டுமல்ல, நாட்டின் மீதான அன்பின் வெளிப்பாடும் எனவும், ரஷ்யாவிற்கு எதிராக போப் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் கடும் குளிர்:

இதனிடையே, உக்ரைனில் தற்போது குளிர்காலம் என்பதால் ரஷிய ராணுவ வீரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். உக்ரைனில் மிகவும் குளிராக இருப்பதால் அந்த குளிரில் இருந்து பாதுகாப்பதற்கான வெப்ப உடைகள் ரஷிய வீரர்களிடம் இல்லை. இதனால் அவர்கள் கடும் குளிரில் உறைந்து போய் உள்ளனர் என ரஷிய ராணுவ தளபதி தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக, ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போதைக்கு தொய்வை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Raja Kannappan API: ”ரூ.400 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்” - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
Minister Raja Kannappan API: ”ரூ.400 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்” - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
ABP Southern Rising Summit 2024: களைகட்டப்போகும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பங்கேற்க உள்ள சினிமா பிரபலங்கள்
ABP Southern Rising Summit 2024: களைகட்டப்போகும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பங்கேற்க உள்ள சினிமா பிரபலங்கள்
TNPSC: தொடரும் அதிரடிகள்; டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் இவ்வளவு சீக்கிரமா?- வெளியான அறிவிப்பு
TNPSC: தொடரும் அதிரடிகள்; டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் இவ்வளவு சீக்கிரமா?- வெளியான அறிவிப்பு
Nuclear Bomb: பேரழிவுக்கான ஆயுதம்..! அணுகுண்டு எப்படி வெடிக்கும் என தெரியுமா? டெட்டனேட்டரின் வேலை என்ன?
Nuclear Bomb: பேரழிவுக்கான ஆயுதம்..! அணுகுண்டு எப்படி வெடிக்கும் என தெரியுமா? டெட்டனேட்டரின் வேலை என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Irfan baby Delivery issue|”இர்ஃபானை மன்னிக்க  முடியாது” கொதித்தெழுந்த அமைச்சர் மா.சு..சர்ச்சை வீடியோMamallapuram | பைப்பால் அடித்த பெண்கள்! ”No Parking-னு சொன்னது குத்தமா?”ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்Priyanka Gandhi  | ROAD Show-ல் காந்தி குடும்பம்?வரலாறு படைப்பாரா பிரியங்கா வாய்ப்பு தருமா வயநாடுTVK Cadre Died | மாநாடு பணியிலிருந்த புஸ்ஸியின் தளபதி திடீர் மரணம்..அதிர்ச்சியில் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Raja Kannappan API: ”ரூ.400 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்” - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
Minister Raja Kannappan API: ”ரூ.400 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்” - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
ABP Southern Rising Summit 2024: களைகட்டப்போகும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பங்கேற்க உள்ள சினிமா பிரபலங்கள்
ABP Southern Rising Summit 2024: களைகட்டப்போகும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - பங்கேற்க உள்ள சினிமா பிரபலங்கள்
TNPSC: தொடரும் அதிரடிகள்; டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் இவ்வளவு சீக்கிரமா?- வெளியான அறிவிப்பு
TNPSC: தொடரும் அதிரடிகள்; டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் இவ்வளவு சீக்கிரமா?- வெளியான அறிவிப்பு
Nuclear Bomb: பேரழிவுக்கான ஆயுதம்..! அணுகுண்டு எப்படி வெடிக்கும் என தெரியுமா? டெட்டனேட்டரின் வேலை என்ன?
Nuclear Bomb: பேரழிவுக்கான ஆயுதம்..! அணுகுண்டு எப்படி வெடிக்கும் என தெரியுமா? டெட்டனேட்டரின் வேலை என்ன?
”கஞ்சா பயிரிடுவது குறைக்கப்பட்டுள்ளதா” உதயநிதி வயதுதான் என் அனுபவம்: சீறிய இபிஎஸ்.!
”கஞ்சா பயிரிடுவது குறைக்கப்பட்டுள்ளதா” உதயநிதி வயதுதான் என் அனுபவம்: சீறிய இபிஎஸ்.!
”யூடியூபர் இர்ஃபானை மன்னிக்க முடியாது “: கொதித்தெழுந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்: இர்ஃபானுக்கு நோட்டீஸ்..
”யூடியூபர் இர்ஃபானை மன்னிக்க முடியாது “: கொதித்தெழுந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்: இர்ஃபானுக்கு நோட்டீஸ்..
Fake Court: போலி சுங்கச்சாவடி, போலி ரூபாய் நோட்டு போல இப்போ போலி நீதிமன்றம்: குஜராத் சம்பவங்கள்!
Fake Court: போலி சுங்கச்சாவடி, போலி ரூபாய் நோட்டு போல இப்போ போலி நீதிமன்றம்: குஜராத் சம்பவங்கள்!
ABP Southern Rising Summit 2024: பிரபலங்கள் பங்கேற்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - முழு பட்டியல் உள்ளே..!
ABP Southern Rising Summit 2024: பிரபலங்கள் பங்கேற்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - முழு பட்டியல் உள்ளே..!
Embed widget