PM Modi US Visit: மோடியின் அமெரிக்க திட்டம் இது தான்... என்னென்ன சந்திப்பு... யார் யாருடன் உரையாடல்!
ஜனாதிபதியான பிறகு பிடன் மற்றும் மோடியின் முதல் சந்திப்பு இதுவாகும். ஆனால் இருவரும் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து பேசியுள்ளார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி நான்கு நாட்கள் பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது அந்நாட்டின் அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸையும் சந்திக்கிறார்.
இந்தியா உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் 76 வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 25ஆம் தேதி பொதுச் சபையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்கு முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனுடனான முதல் இருதரப்பு சந்திப்பு செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தான் விவகாரம், பருவநிலை மாற்ற பாதிப்புகள், சீனாவின் நடவடிக்கைகள் எனப் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசவுள்ளார். அந்த நாளின் பிற்பகுதியில், ஜப்பானிய யோஷிஹைட் சுகா, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
ஜனாதிபதியான பிறகு பிடன் மற்றும் மோடியின் முதல் சந்திப்பு இதுவாகும். ஆனால் இருவரும் பல சந்தர்ப்பங்களில் சந்தித்து பேசியுள்ளார்கள். 2014 ஆம் ஆண்டு, பிரதமராக அமெரிக்காவிற்கு பயணம் செய்தபோது அவர் பிடனை சந்தித்தார். அப்போது ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் பிடன் துணை ஜனாதிபதியாக இருந்தார். பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி பிடனுக்கும் இடையிலான கடைசி தொலைபேசி உரையாடல் ஏப்ரல் 26 அன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பிடனுடனான சந்திப்புக்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் செப்டம்பர் 23ஆம் தேதி வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும். கொரோனா நெருக்கடியின் போது ஹாரிஸ் முன்பு மோடியுடன் தொலைபேசியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து, அமெரிக்க முன்னணி நிறுவனங்களின் ஐந்து தலைமை நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்திக்கிறார். இதில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்யை சந்திப்பது உறுதியாகியுள்ளது. மற்ற பெயர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
"பிடென்-ஹாரிஸ் நிர்வாகம் இந்தியாவுடனான எங்கள் கூட்டாட்சியை ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் நிறுவனத்தை நிலைநிறுத்தி, கொரோஆ தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. மேலும், காலநிலை நெருக்கடியை சமாளிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுத்துள்ளது" என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் கொண்ட QUAD கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார். இதன்பிறகு, செப்டம்பர் 25ஆம் தேதி பிரதமர் மோடி நியூயார்க்கிற்குச் செல்கிறார். அன்று அவர் ஐநா சபையின் பொது விவாதத்தில் உரையாற்றுகிறார். காலநிலை, எரிசக்தி மற்றும் உணவு அமைப்புகள் குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஏற்பாடு செய்யும் மூன்று உயர்மட்டக் கூட்டங்களில் இந்தியா பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL Ban In Afghanistan | ஆஃப்கனில் ஐபிஎல் ஒளிபரப்புக்கு தடைவிதித்த தலிபான்கள்.. காரணம் தெரியுமா?