சிறுவனுக்கு 26 முறை கத்தி குத்து... வீட்டின் உரிமையாளர் செய்த வெறிச்செயல் - அமெரிக்காவில் கொடூரம்
அமெரிக்காவில் 6 வயது இஸ்லாமிய சிறுவனை, முதியவர் ஒருவர் 26 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime: அமெரிக்காவில் 6 வயது இஸ்லாமிய சிறுவனை, முதியவர் ஒருவர் 26 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே 11 நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் வசித்து வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த 6 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். நெஞ்சை உறைய வைக்கும் வகையில் நடைபெற்றுள்ள இந்த கொலை சம்பவம் தொடர்பாக அந்த நபர் மீது கொலை மற்றும் வெறுப்பு குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
6 வயது சிறுவன் கொலை:
அமெரிக்காவின் சிகாகோ நகரின் மேற்கு பகுதியில் வசித்து வந்தவர் 32 வயதுடைய பெண். இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர்கள் வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் இவர்களை கொடூரமாக கத்தியால் குத்தி உள்ளார். 26 முறை கத்தியால் குத்தப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சிறுவன் கிடந்துள்ளார். இதனை பார்த்த அந்த பெண், தனது மகனை காக்க முதியவருடன் போராடினார். ஆனால், அவரையும் முதியவர் கத்தியால் குத்தியுள்ளார். அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் வீட்டு குளியல் அறைக்குள் ஓடினார். ஆனாலும் அந்த முதியவர் அவரை விடாமல் தொடர்ந்து கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவர், செல்போனில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்ணையும், சிறுவனையும் மீட்டு மருத்துவமனைக்கு சிசிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், அந்த பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுவனை ஈவு இரக்கம் இல்லாமல் குத்திக்கொன்றது 77 வயதுடைய ஜோசப் சுபா என்பது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அமெரிக்கா நபர் மீது கொலை மற்றும் வெறுப்பு குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கொடூர கொலையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்த வீட்டின் உரிமையாளரே நிகழ்த்தியதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கொல்லப்பட்ட சிறுவன் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் போரால் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்
மேலும் படிக்க
தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கீகாரம் வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம்